Tuesday, December 31, 2019

“கொலை செய்ய தூண்டும் பேச்சு” நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29-ந் தேதி பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதோடு, அவர்கள் இருவரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், நெல்லை கண்ணனுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னையில் ஆளுநர் மாளிகையிலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை கண்ணன் மீது இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முயல்வது, இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற , ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குவது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த குறிப்பிட்ட இரண்டு அரசியல் கட்சியினர், நெல்லை கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், உடல்நிலை சரியில்லை என்றால் அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி போலீசாரே அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினரை சமாதானம் செய்த போலீசார், ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். வண்ணார்பேட்டையிலுள்ள கேலக்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெல்லை கண்ணனை அங்கு சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

“விரைவாக முடிவடைந்த தனுஷ் படம்”

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இவற்றில் அசுரன் பெரிய வெற்றி பெற்றது. தனுஷ் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் முடிந்து பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வந்தார். ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். பிரேவ் ஹார்ட், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இந்த படத்துக்கு சுருளி என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.


இது தனுசுக்கு 40-வது படம். படப்பிடிப்பு சென்னையிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்தது. பழனியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

"கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. நான் நடித்த படங்களிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். விவேகமான திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு சிறப்பான படமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதான் ஹீரோயின்னு சொன்னார்.. பழகினேன்.. கள்ளகாதலால்.. நொறுங்கிட்டேன்..ஷாக் வாக்குமூலம்

"தேவி.. நீதான் என் ஹீரோயின்"ன்னு சொன்னார்.. அதனால நெருங்கி பழகினேன்.. ஆனா கடைசியில இப்படி ஆயிடுச்சு" என்று துணை நடிகை தேவி வாக்குமூலம் தந்துள்ளார். சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவிதான் தேவி.. சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.. நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கும் ரவி என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.. ரவியும் துணை நடிகர்தானாம்.. இந்த விஷயம் சங்கருக்கு தெரியவந்ததும், தேவியை கண்டித்தார். அதனால், தேவி, ரவியுடன் பழகுவதை நிறுத்திகொண்டார்.. இதனால் ரவி கடுப்பானார்... தேவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். 2 வருடங்களாக ரவியுடன் பேச்சுவார்த்தையும் இல்லை.. எனினும் தேவி வீட்டுக்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்தார். இதனால் போன் நம்பரையும் மாற்றிவிட்டார், வீட்டையும் மாற்றிவிட்டார் தேவி. இந்த நிலையில் கொளத்தூரில் உள்ள தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு ரவி குடிபோதையில் சென்று கதவை தட்டி தகராறு செய்துள்ளார். "தேவியின் அட்ரஸ் என்ன.." என்று கேட்டு லட்சுமியின் குழந்தையின் கழுத்தையும் பிடித்து நெரித்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தேவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். லட்சுமி வீட்டில் ரவி சென்று தகராறு செய்தவதை கேள்விப்பட்ட தேவி, கணவன் சங்கருடன் அங்கு சென்றார். தேவி, சங்கர், லட்சுமி, லட்சுமியின் கணவர் சவாரியா 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டையாலேயே சரமாரியாக அடித்தனர்.. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் போலீஸ் ஸ்டேஷனில் ரவியை கொன்றுவிட்டோம் என்று கூறி சரணடைந்தனர். இது சம்பந்தமாக தேவி தந்த வாக்குமூலம் இதுதான்: "நான் சினிமா, சீரியல்களில் நடித்து வருகிறேன். 8 வருஷத்துக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கின்போதுதான் ரவியை எனக்கு தெரியும்.. அவரும் துணை நடிகர்தான்.. அடிக்கடி என் வீட்டிற்கு என்னை சந்திக்க வருவார். ஒருநாள் திடீர்ன்னு "நான் படம் எடுக்க போறேன்.. டைரக்ட் செய்யலாம்னு இருக்கேன்.. உன்னை ஹீரோயின் ஆக்கிடறேன்" என்று ரவி சொன்னார்.. அதை நம்பிதான் நானும் அவருடன் பழகினேன். ஆனால், அவர் வீட்டுக்கு அடிக்கடி வரவும், குடும்பத்தில் பிரச்சனை வந்தது.. ஆனால் எங்களுக்குள் எந்த விரிசலும் வரவில்லை..இதுக்கு பிறகு அவருக்கு சான்ஸ் எதுவும் நடிக்க வரவில்லை.. அதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.. அடிக்கடி குடிச்சிட்டு வந்து தொல்லை தர ஆரம்பிச்சார்.. வேற வீட்டுக்கு மாறி போனதால், என் தங்கச்சி லட்சுமி வீட்டுக்கு போய் தகராறு செய்திருக்கிறார்.. என் தங்கச்சி மகள் கழுத்தை நெரித்ததால் ஆத்திரத்தில் நாங்கள், கட்டையால் அடித்து கொன்றோம்" என்று வாக்குமூலம் தந்தார்.

நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு

நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறத. குறிப்பாக ள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்.அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான் இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.இதையடுத்து பாஜகவினர் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டதோடு, நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, December 26, 2019

ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?

நரேந்திர மோதி - 'ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?' - சர்ச்சையில் இந்திய பிரதமர்





வியாழக்கிழமை) அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் காண முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புகைப்படம் ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தற்போது, அந்த புகைப்படம்தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.  

Wednesday, December 25, 2019

Ajith completes the Hyderabad schedule for Valmai

Thala Ajith is one of the star heroes in Kollywood movie industry. The star hero scored a hit in the form of Nerkonda Paarvai, which is the remake of Pink in Tamil. Soon after the film, the actor teamed up with the same director Vinoth for another exciting film Valmai. The makers began the shoot of the movie in Hyderabad sometime back and as per the Kollywood reports, Ajith completes the Hyderabad schedule and the makers are happy with the output. Ajith completes the Hyderabad schedule and now back to Chennai to spend some time with family before he joins the second schedule. Yami Gautam is almost confirmed to play Ajith's pair in the film. 


Boney Kapoor produces the movie and Yuvan Shankar Raja is the music director. The makers plan to release the movie for Diwali next year

கீர்த்தி சுரேஷுக்கு பூங்கொத்து கொடுத்த 'சூப்பர் ஸ்டார்'!

மறைந்த புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு வெளியான படம் 'மகாநடி'. இந்த படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,  கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த தேசிய விருது விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கைகளில் இருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார் கீர்த்தி சுரேஷ். விருதைப் பெற்றுக்கொண்டு, 'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.





நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து கீர்த்தி சுரேஷ்க்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். பிறகு, ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து 'கேக்' வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thalaivar Superstar Rajinikanth Congratulates Keerthy Suresh

Keerthy Suresh is one of the talented actors in the tinsel town. After Mahanati, the craze of the actress has entered to an altogether new zone. She scored many awards for her performance in the movie and National Award is one such that gave her National wide fame. Superstar Rajinikanth Congratulates Keerthy Suresh and celebrated her victory personally on the sets of their new movie.



Sun Pictures posted the pictures on Twitter and wrote, "Team #Thalaivar168 congratulates @KeerthyOfficial for winning the National Award for Best Actress. #66thnationalfilmawards"

We can see Keerthy cutting the cake in pictures and Superstar Rajinikanth Congratulates Keerthy Suresh.

The scenes in their combination from their ongoing project are said to be the major highlight of the movie. Siva directs the film and Sun Pictures produces it. More details about the project will come out soon.

Tuesday, December 24, 2019

கொலையில் முடிந்த முறையற்ற உறவு..!

சென்னையில் தந்தை வயதுடைய நபருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 24 வயது இளம்பெண், ஒரு கட்டத்தில் அவனது தொல்லை தாங்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சாத்துமா நகர் பகுதியைச் சேர்ந்த "அம்மன்" சேகர் என்பவர் அதே பகுதியில் கற்பூர வியாபாரம் செய்து வந்துள்ளார். திங்கட்கிழமை இரவு துறைமுக குடியிருப்பு அருகே சேகர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார் பவித்ரா என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கொலையான சேகருக்கு கல்லூரி படிப்பு முடித்த மகள் ஒருவர் இருக்கிறார். அவருடைய வகுப்புத் தோழியான பவித்ரா, சேகரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மகள் வயதுகொண்ட பவித்ராவை சேகர் தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சேகரின் வயது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை எழுப்பவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த முறையற்ற உறவு, அண்மையில்தான் சேகரின் மகளுக்கும் அதன் பின்னர் பவித்ராவின் குடும்பத்தாருக்கும் தெரியவந்திருக்கிறது. இருவரையுமே அவர்களது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

அதன் பின்னரும் இந்தத் தொடர்பு நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், பவித்ராவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மனம் மாறிய பவித்ரா, தன்னை விட்டு விலகுமாறு சேகரிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை மறுத்து, தொடர்ந்து தன்னை மிரட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக பவித்ரா ஒப்புக்கொண்டார் என போலீசார் கூறுகின்றனர்.

சம்பவத்தன்று சேகரின் பிறந்தநாள் என்று கூறப்படும் நிலையில், அவருக்குப் பரிசு கொடுப்பதாக இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று வாயைப் பொத்தி, கண்களில் ஃபெவிக்காலை ஊற்றியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தந்தை - மகள் வயது கொண்ட இருவரது முறையற்ற பழக்கம் இருவரது வாழ்வையுமே சீரழித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

Thursday, December 19, 2019

இளம்பெண்ணுடன் மேஸ்திரிக்கு காதல், மோட்டார் அறையில் நேர்ந்த சோகம்...

நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மாணிக்கவேல். மாணிக்கவேலுக்கும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பெண்ணின் அண்ணன் மாணிக்கவேல் வீட்டிற்கு சென்று அவரது தாயிடம் என் தங்கையிடம் உன் மகன் பழகுவதை விட்டுவிட சொல் என மிரட்டி உள்ளார். அன்று இரவிலிருந்தே மாணிக்கவேல் காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். பின்னர் எர்ரம்பட்டி அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் மாணிக்கவேல் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அதியமான்கோட்டை காவல்துறையினர் மாணிக்கவேல் வயிற்று வலிகாரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு மாணிக்கவேலின் உறவினர்கள், மாணிக்கவேல் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் எனவும், காவல்துறையினர் முழு விசாரணை செய்யாமலே தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது என குற்றம் சாட்டினர். மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என மாணிக்கவேல் உறவினர்கள், அதியமான் கோட்டை காவல்நிலையம் முன்பு சுமார??? 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நேரில் வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, மர்மமான முறையில் இறந்த மாணிக்கவேலுவின் மரணத்தை முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரதத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.  

இரண்டாவது சுற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ‘சல்யூட்’ காட்ரல்...!

அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் இரண்டாவது சுற்றின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் செல்டன் காட்ரல் அதிகபட்சமாக ரூ. 8.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 

ரூ. 8 கோடி இவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் கூல்டர் நைல் ரூ. 8 கோடிக்கு கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவர்களைத்தொடர்ந்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவை அணி ரூ. 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாவது சுற்றின் முடிவில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் பாட் கம்மின்ஸ் - ரூ. 15.50 கோடி (கொல்கத்தா) கிளன் மேக்ஸ்வெல் - ரூ. 10.75 கோடி (பஞ்சாப்) கிறிஸ் மோரிஸ் - ரூ. 10.00 கோடி (பெங்களூரு) செல்டன் காட்ரல் - ரூ. 8.50 கோடி (பஞ்சாப்) நாதன் கூல்டர் நைல் - ரூ. 8 கோடி (மும்பை) ப்யூஸ் சாவ்லா - ரூ. 6.75 கோடி (சென்னை) சாம் கரன் - ரூ. 5.50 கடி (சென்னை) இயான் மார்கன் - ரூ. 55..25 கோடி (கொல்கத்தா) மீதித்தொகை எவ்வளவு இரண்டாவது சுற்றுக்கு பின் எல்லா அணிகளின் மீதிக்கையிருப்பு தொகைப்பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 2.35 கோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 23.45 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 22.90 கோடி டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 22.45 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 17.00 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 14.90 கோடி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 13.50 கோடி மும்பை இந்தியன்ஸ் - ரூ. 3.05 கோடி

Wednesday, December 18, 2019

ஸ்ரீலங்கா அழகு தேவதை பிக் பாஸ் புகழ் லாஸ்லியா

ஸ்ரீலங்கா அழகு தேவதை பிக் பாஸ் புகழ் லாஸ்லியா. தன் அழகால் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் #LosliyaArmy புத்தம் புதிய அழகிய புகைப்பட தொகுப்பு உங்கள் மேலான பார்வைக்கு வழங்கிறது கோலிவுட் சினிமா
#Losliya Losliya Army










சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் : பிரதமர் நித்தியானந்தா

சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் என பிரதமர் நித்தியானந்தா என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவதாக கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை எனக் கூறிய சீமான், தங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்து தனக்கே உரிய பானியில் சிரித்தார்.

இதற்கு கைலாசா பிரதமர் நித்தியானந்தா என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்" என பதிவிடப்பட்டுள்ளது.

நித்யானந்தாவை கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

நித்யானந்தாவுக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இன்டர்போலின் அதிகாரத்திற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்படும்.


ஒரு நாட்டில் தேடப்படும் குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றால் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்.


நித்யானந்தாவுக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இன்டர்போலின் அதிகாரத்திற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்படும்.


தங்களது நாட்டில் நித்யானந்தா உள்ளாரா இல்லையா என்ற விவரத்தை அந்த நாடுகள் இன்டர்போலுக்கு தெரிவிக்கும். கர்நாடகாவில் சிஷ்யை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நித்யானந்தாவை காவல்துறை தேடி வருகிறது.

இது தொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்போது வரை நித்யானந்தா எங்கே இருக்கிறார் என தெரியாத நிலையில், அவரை கண்டுபிடிக்க ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கர்நாடக சிஐடி முறையிட்டுள்ளது

கோவையில் வலுக்கும் மாணவர் போராட்டம்: ஆளுநருக்காக மாணவர்களைத் தூக்கிச் சென்ற காவல்துறை!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடும் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. சென்னைப் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் திருச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் அளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதேபோல் கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுக்க இந்த விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது  

எங்கிருக்கிறார் நித்யானந்தா?

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் சாமியார் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய சர்ச்சை பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்திருந்தார். 


இதையடுத்து நித்யானந்தா மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் பாலியல் வழக்கு ஒன்றில் கர்நாடக போலீசாரும் நித்யானந்தாவை தேடி வருகின்றனர். இந்த சூழலில் தனது சிஷ்யர்களுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஈக்வெடார் நாட்டிற்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு 'கைலாசா' என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதாவது 'கைலாசா'வை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை கேட்டு 'ஆன்லைன்' மூலம் பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தீவில் செல்லப் பிராணிகளுக்கும் இடமுண்டு என்றெல்லாம் கூறி வந்தார். சமீபத்தில் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காதே குற்றப்பிரிவுகளே இல்லை. ஆனால் அனைத்திலும் நான் நிரபராதி என்று நிரூபித்து வந்துள்ளேன். ஆன்மீகத் துறையில் எப்போதே தலைவனாகி விட்டேன். என்னை பற்றி மீம்ஸ் போடும் மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். தற்போது என்னை பற்றி அதிகமாக ஊடகங்கள் பேசி வருகின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்ற காமெடியை போல் எனது நிலை ஆகிவிட்டது. கைலாசா நாட்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இங்கு வசிக்க 40 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே கைலாசத்தை அமைத்தே தீருவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் பெங்களூரு போலீசாருக்கு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் என்ன பதில் அளிக்கப் போகின்றனர்? வேறு ஏதேனும் தீர்வு வைத்திருக்கின்றனரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியக் குடியுரிமை வேண்டாம்: பாகிஸ்தானில் இந்துக்கள்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், திருத்தப்பட்ட சட்டம் மூலம் வழங்கும் குடியுரிமை தங்களுக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அல்லாத பிறருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. இந்து, புத்தம், கிறிஸ்துவம், பார்சி, சமணம் என எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் இந்தியக் குடியுரிமை கிடைக்க உதவுகிறது. ஆனால் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்க்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவருக்கும் எந்தவித ஆணவணத்தையும் சமர்ப்பிக்காமலே குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இந்நிலையில், இதை எதிர்த்துள்ள பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசார் மங்களானி, "பாகிஸ்தானிய இந்துக்கள் ஒருமித்த கருத்துடன் இந்தியாவின் குட???யுரிமைச் சட்டத்திருத்தத்தை நிராகரிக்கிறோம். இது சமூகப் பாகுபாடுகளால் இந்தியாவை பிரிவினையை நோக்கி இட்டுச்செல்லும்" எனக் கூறியிருக்கிறார். "இது இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தான் இந்துக்களின் ஒருமித்த கருத்து. உண்மையான இந்துவால் இந்தச் சட்டத்தை ஒருபோது ஆதரிக்க முடியாது." எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே இந்தச் சட்டம் மீறியிருக்கிறது எனவும் அவர் விமர்சித்தார். இது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டீன் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் சீக்கிய சமூகத்தினரும் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பை கூறியுள்ளனர். "பாகிஸ்தான் சிக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள சீக்கிய சமுதாயமும் இதனைக் கண்டிக்கிறது" என பாபா குரு நானக் அமைப்பின் தலைவர் கோபால் சிங் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சிறுபான்மையினராகவே உள்ளனர். அவர்களில் ஒருவர் என்ற முறையின் முஸ்லிம்களின் அச்சத்தைப் புரிந்துகொள்கிறேன்." எனவும் அவர் கூறியுள்ளார்.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A01! பட்ஜெட் விலையில் இன்பினிட்டி வி-டிஸ்பிளே + 3000mAh பேட்டரி!

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A01! பட்ஜெட் விலையில் இன்பினிட்டி வி-டிஸ்பிளே + 3000mAh பேட்டரி!

சுவாரசியமாக கேலக்ஸி ஏ01 ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு மற்றும் பின்புறத்தில் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கியமான அம்சங்களை பொறுத்தவரை, இதன் 5.7 இன்???் எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 8 ஜிபி வரை ரேம், சேமிப்பக விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3,000 எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கூறலாம். விலை மற்றும் விற்பனை பற்றி... தற்போது வரையிலாக சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. ஆனால் எந்த சந்தை முதலில் வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. 

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடிவமைப்பு பற்றி... புதிய ஸ்மார்ட்போனின் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவின் கீழே சிறிய அளவிலான கன்னப்பகுதியை காண முடிகிறது. பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பிற்கு கீழே செங்குத்தாக ஒரு ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மாட்யூல் ஆனது பின் பேனலின் மேல் இடது விளிம்பில் வைக்கப்படுகிறது. பவர் பட்டன் ஆனது டிஸ்பிளேவின் வலது விளிம்பிலும், அதே சமயம் வால்யூம் கண்ட்ரோல் பட்டன் ஆனது இடது விளிம்பிலும் அமைந்திருக்கிறது. 

வெளியான புகைப்படங்களின் வெளியாக இதன் கைரேகை சென்சாரை கண்டுபிடிக்க முடியவில்லை. டிஸ்பிளே, ப்ராசஸர் & மெமரி பற்றி... சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பட்டியலிடவில்லை இருப்பினும் சில பிரதான அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது 5.7 இன்ச் அளவிலான எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டா கோர் (குவாட் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் + குவாட் 1.45 ஜிகாஹெர்ட்ஸ்) எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பங்களில் வருகிறது, 128 ???ிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ளது. உடன் மெமரி விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது. 

கேமரத்துறை பற்றி... சாம்சங் கேலக்ஸி ஏ01 அதன் பின்புறத்தில் உள்ள டூயல் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அளவிலான பிரதான கேமரா + 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) அளவிலான இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 5 மெகாபிக்சல் (எஃப் / 2.0) அளவிலான கேமராவை கொண்டுள்ளது. பேட்டரி பற்றி... சாம்சங் கேலக்ஸி A01 ஆனது ஒரு 3,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இரட்டை சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் FM ரேடியோவையும் ஆதரிக்கிறது. சென்சார்களை பொறுத்தவரை ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார் மற்றும் ஆக்ஸலரோமீட்டர் போன்றவைகளை கொண்டுள்ளது.

Tuesday, December 17, 2019

எங்கிருக்கிறார் நித்யானந்தா?- என்ன செய்யப் போகிறது போலீஸ்? அவ்வளவு தான் முடிஞ்சுது டைம்!

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் சாமியார் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய சர்ச்சை பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து நித்யானந்தா மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் பாலியல் வழக்கு ஒன்றில் கர்நாடக போலீசாரும் நித்யானந்தாவை தேடி வருகின்றனர். இந்த சூழலில் தனது சிஷ்யர்களுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஈக்வெடார் நாட்டிற்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு 'கைலாசா' என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதாவது 'கைலாசா'வை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை கேட்டு 'ஆன்லைன்' மூலம் பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தீவில் செல்லப் பிராணிகளுக்கும் இடமுண்டு என்றெல்லாம் கூறி வந்தார். சமீபத்தில் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காதே குற்றப்பிரிவுகளே இல்லை. ஆனால் அனைத்திலும் நான் நிரபராதி என்று நிரூபித்து வந்துள்ளேன். ஆன்மீகத் துறையில் எப்போதே தலைவனாகி விட்டேன். என்னை பற்றி மீம்ஸ் போடும் மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். தற்போது என்னை பற்றி அதிகமாக ஊடகங்கள் பேசி வருகின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்ற காமெடியை போல் எனது நிலை ஆகிவிட்டது. கைலாசா நாட்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இங்கு வசிக்க 40 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே கைலாசத்தை அமைத்தே தீருவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் பெங்களூரு போலீசாருக்கு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் என்ன பதில் அளிக்கப் போகின்றனர்? வேறு ஏதேனும் தீர்வு வைத்திருக்கின்றனரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.   

குடியுரிமை சட்டத்தின்கீழ் முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவார்களா? - மத்திய அரசு விளக்கம் !!


குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள நாடு கடத்தப்படுவார்களா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரானது எனக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் தொடங்கி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் எழுப்பி வரும் பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. கேள்வி -பதில் பாணியில் அந்த விளக்கம் அமைந்துள்ளது. 

கேள்வி : குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்திய குடிமக்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா? 

பதில் : முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட எந்தவொரு இந்திய குடிமகனையும் இந்தச் சட்டம் பாதிக்காது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனைத்து இந்திய குடிமக்களும் எப்போதும் போல் அனுபவிக்கலாம். இவற்றை குடியுரிமைச் சட்டம் ஒருபோதும் பறிக்காது. இந்த உண்மைக்கு புறம்பாக, நாடு முழுவதும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேள்வி : அப்படியென்றால், இந்தச் சட்டம் யாருக்காக தான் கொண்டு வரப்படுகிறது? பதில் : பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தியாவில் குடியேறிய, ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதேசமயம், குறிப்பிட்ட மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம் உள்ளிட்டோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. கேள்வி : ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டடோருக்கு குடியுரிமைச் சட்டம் எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும்? பதில் : பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்டோரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டாலும் அல்லது இந்த ஆவணங்களே இல்லாவிட்டாலும், அவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ், இந்திய குடிமக்களாக தங்களை அங்கீகரிக்க கோரி விண்ணப்பிக்கலாம். அத்துடன், வெளிநாட்டிலிருந்து இங்கு குடியேறியவர்கள் இந்திய குடிமக்களாக அங்கீகாரம் பெற இங்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் (1 +11) வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒருவர் 6 ஆண்டுகள் (1+5) வரை இந்தியாவில் தங்கியிருந்தாலே அவரை குடிமகனாக அங்கீகரிக்க இச்சட்டம் வழி வகுக்கிறது. கேள்வி : ஆக இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள் இந்திய பிரஜை ஆக முடியாது அப்படி தானே? பதில் : வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறியேறுபவர்கள், இந்திய குடியுரிமையை பெறுவதற்கு தற்போது பின்பற்றப்பட்டு வரும் சட்ட விதிமுறைகள் எப்போதும் போல் நடைமுறையில் இருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இதுதொடர்பாக எவ்வித மாற்றமோ, திருத்தமோ மேற்கொள்ளப்படவில்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு, கடந்த சில ஆண்டுகளில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய - வங்கதேச எல்லைப் பிரச்சனைக்கு 2014இல் சட்டப்படி தீர்வு காணப்பட்ட பிறகு, வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட மொத்தம் 14,864 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கேள்வி : பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லிம்கள், இந்தச் சட்டத்தின்கீழ் நாடு கடத்தப்படுவார்களா? பதில் : எந்தவொரு வெளிநாட்டினரையும் நாடு கடத்துவதற்கான எந்த அம்சமும் குடியுரிமை திருத்தச் சட்???த்தில் நிச்சயமாக இடம்பெறவில்லை. அதேசமயம், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ளவர்கள், வெளிநாட்டினருக்கான சட்டம் 1946 (Foreigners Act 1946), பாஸ்போர்ட் சட்டம் 1920 (The passport (Entry into India) Act 1920 ஆகிய இருசட்டங்களின் கீழ், முறைப்படி நாடு கடத்தப்படுவார்கள். ஒருவரின் சொந்த நாடு, அவர் சார்ந்த மதம் என்ற பாகுபடின்றி, இந்த நடவடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டுதான் வருகிறது. அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் தொடர்ந்து பின்பற்றப்படும். இவ்விரு சட்டங்களிலும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்களுக்கும் தேவையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ், முஸ்லிம்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அதாவது, அவர்கள் நிச்சயமாக நாடு கடத்தப்படமாட்டார்கள்

குடியுரிமைச் சட்டம்... சென்னை பல்கலைக்கழகத்திற்கு 23 வரை கட்டாய விடுமுறை!



பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதாவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்புதலுக்கு வந்த மசோதாவை, நள்ளிரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தர். இதனால் சட்டமாக்கப்பட்டது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களைத் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு ஆதரவாக இருப்பதால் பெரிய போராட்டம் வராது எனக் கணிக்கப்பட்டது. 

எனினும், பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதாலும் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் போது ஆங்காங்கே வன்முறைகளும் கட்டவிழ்த்து விட???்படுகின்றன. அசாம் மாநிலத்தில் 5 பேர் மரணத்திற்குப் பின் இன்று நிலை சீராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று முதல் இணையத்தள சேவையை அரசு மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் திரிபுரா, மேகாலயா, மேற்குவங்கம் என இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர்ந்து இன்றும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

#isupportcaaprotest என்ற ஹேஸ் டேக் பிரபலமடைந்து வருகிறது. டில்லியில் 2வது நாளாக இன்று நடந்த போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சில இடங்களில், போராட்டக்காரர்கள் காவல் துறையினரைச் சிறை பிடித்து வைத்தனர். தமிழ்நாட்டில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துத் தொடங்கிய போராட்டம் சற்று விரிவடைந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதே வேளையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2வது நாளாகப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்புக் குரல் காரணமாக, பல்கலைக்கழகத்தை 23ஆம் தேதி வரை மூடி வைக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 23ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இப்போது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் கலைப்பு தெரியாமலிருக்கக் கானா பாட்டுக்களைப் பாடிக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். த???ிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் சென்னை ஐ.ஐ.டி., மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய ஆதார் கார்ட்!

ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், அடையாள அட்டையைப் பெற்றபோதும் பணி திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், உடல் நலம் குன்றிப் போன அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் ஆதார் தொடர்பாக வழங்கி தீர்ப்பில், வங்கிகள் உள்பட எந்தவொரு துறையிலும் கட்டாயமாக ஆதார் அடையாள அட்டையைக் கேட்டு பயனாளிகளைக் கஷ்டப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியாகி அமலிலிருந்தாலும், வங்கிகள் தொடங்கி எங்கும் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. 

வங்கி அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினால் எங்களுக்கு அந்த உத்தரவின் நகல் வரவில்லை என பதிலளிக்கிறார்கள். இந்த சூழலில் ஆதார் அட்டையால் பெண் ஒருவரின் நிலை தலைகீழாக மாறிப்போன அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ந???ல்லூர் அரசு மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தவர் மாலதி. இவர் பணியிலிருந்தபோது ஆதார் அடையாள அட்டை இல்லை. இதனால் மாலதியை, கடந்த ஆண்டு மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து விலக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாலதி, மருத்துவமனையில் தனக்குப் பணி வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். எனினும், மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில் மாலதி ஆதார் அடையாள அட்டையை அரசிடம் விண்ணப்பித்து அதைக் கையிலும் பெற்று விடுகிறார். 

அரசிடமிருந்து பெற்ற ஆதார் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளிடம் சென்று மாலதி முறையிட்டார். எனினும் முறையான பதில் கிடைக்கவில்லை. அதே வேளையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்த மாலதி, மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் வீட்டில் கவலைக்கிடமாகக் கிடப்பதைப் பார்த்த மாலதியின் உறவினர்கள் சிலர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாலதி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது தவறு; பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் விமர்சனம்

மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது தவறு; ஆனால்... பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் விமர்சனம் 

அவங்கள கண்டதும் சுட்டுத்தள்ளுங்க: அமைச்சர் அதிரடி உத்தரவு !!

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனே சுட்டுத் தள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு ரயில்வே துறை ???ணையமைச்சர் சுரேஷ் அங்காடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 



நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமாகியுள்ளது. இந்த நிலையில், இச்சட்டம் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பூகோளரீதியாக வங்கதேச எல்லையை ஒட்டிய மாநிலமான மேற்கு வங்கத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றுவதைப் போல, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது, டெல்லி போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் சுட்டதில் இந்த மூன்று பேரும் இறந்தனர். தலைநகர் டெல்லியில் மூன்று பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஒரு காவல் நிலையமே திங்கள்கிழமை இரவு தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு தில்லி பகுதியில் இன்று மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி அதிரடியாக அறிவுறுத்தல் ஒன்றை அளித்துள்ளார???. ரயில்வே துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அளித்துள்ள அறிவுறுத்தலில், "போராட்டத்தின்போது ரயில்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டவுடன் சுட்டுத் தள்ளுங்கள் " என அமைச்சர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் வழக்கு.... உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு!

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது போலீசால் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முதல்நாள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களை நேற்று போலீசார் தாக்கியது தொடர்பான புகாரை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. 

இதையடுத்து டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனு அளித்தார். இந்திரா ஜெய்சிங் தனது மனுவில், டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிய வேண்டும். டெல்லி போலீஸ் மாணவர்கள் மீது தாக்கியதை முன்னாள் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் இதை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே வழக்கை தாமாக முன் வந்து பதிய முடியாது, நேற்று அவசரமாக விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். கலவரம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன். கலவரம் மொத்தமாக நிற்கட்டும், பின்பு பார்க்கலாம். மனுதாக்கல் செய்யுங்கள்: நாளை விசாரிக்கிறோம் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரித்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பு வைத்த வாதத்தில், படிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது. மாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது.போலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள்.மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது.பல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது. முன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும், என்றனர். இதை எதிர்த்த அரசு தரப்பு, மாணவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டார்கள். ஆனால் அவர்களை போலீஸ் கைது செய்யவில்லை. காயம் அடைந்த மாணவர்களை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தோம் என்று கூறினார்கள். இதையடுத்து உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இந்த போராட்டம் பல மாநிலங்களில் நடந்துள்ளது. அதனால் இதை மொத்தமாக உச்ச நீதிமன்றம் விசாரித்தால் சரியாக இருக்காது. மாநில உயர் நீதிமன்றங்கள் இதை விசாரித்தால்தான் சரியாக இருக்கும். அதனால் உயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம்.சம்பவம் நடந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களை மாணவர்களை அணுகலாம். மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம்.மாநில உயர் நீதிமன்றம் இதில் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில ஹைகோர்ட்டுகளில் இது தொடர்பான வழக்கு தொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏன் மறைச்சே.. ஏன் என்னை ஏமாத்துனே.. உலுக்கி எடுத்த பாத்திமா.. கடைசியில் தற்கொலை!

சித்தூர்: "ஏன் என்கிட்ட இருந்து மறைச்சே.. ஏன் ஏன்னை ஏமாத்தினே" என்று கேள்வி கேட்டு பாத்திமா காதலனை உலுக்கி எடுத்துவிட்டார்.. இறுதியில் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாமல் தற்கொலையே செய்து கொண்டார். 

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்தார். இவரது மகள் பாத்திமா.. 19 வயதாகிறது.. மதனப்பள்ளியில் ஒரு தனியார் காலேஜில் பி.காம்.2வது வருஷம் படித்து வந்தார்.இவர் இப்ராகிம் என்பவரை விரும்பினார்.. இப்ராகிம் இவர் வீட்டு பகுதியிலேயே வசிப்பவர்.. ஆட்டோ ஓட்டுகிறார்.. 2 வருடமாக அதிதீவிரமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்தான், இப்ராகிமுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ள சமாச்சாரம் பாத்திமாவுக்கு தெரியவந்தது.. விஷயத்தை தெரிந்து கொதித்து போனார் பாத்திமா.. இப்ராகிடம் சென்று, "ஏன் என்னை ஏமாற்றினே.. ஏன் என்கிட்ட கல்யாணம் ஆனதை மறைச்சே.." என்று கேட்டார். இதுதான் இருவருக்கும் தகராறாக உருமாறியது. 

காலை உடைத்து.. ஆணுறுப்பில் தீ வைத்து.. சாதாரண செல்போனுக்காக.. கேரளாவில் பதற வைக்கும் ஷாக் சம்பவம்! 

இந்த சண்டைக்கு பிறகு பாத்திமா மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.. காலேஜ்-க்கும் போகவில்லை. இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கவே முடியவில்லை.. அதனால் வீட்டின் ஒரு ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அலறி கதறினர்.. சித்தூர் 2-டவுன் போலீசாரும் தகவலறிந்து வந்து சடலத்தை மீட்டனர்.பாத்திமா இறந்தது தெரிந்ததுமே இப்ராகிம் ஆளை காணோம்.. அதனால், பாத்திமாவின் பெற்றோர், உறவினர்கள் இப்ராகிமை கைது செய்யக்கோரி பாத்திமாவின் சடலத்துடன் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையில் ஆவேசமாக ஈடுபட்டனர். இப்ராகிமை உடனேகைது செய்கிறோம் என்று போலீசார் வாக்கு தந்ததுடன், தலைமறைவானவரையும் தேடி வருகிறார்கள்.

Saturday, December 14, 2019

பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: குஷ்பூ

திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பேசியுள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய குஷ்பூ, பெண்கள் பாதுகாப்பில் சென்னையை போல வேறு நகரம் இல்லை என்றும் ஆனால் சென்னையிலும் பிரச்னைகள் உள்ளதாகவும் கூறினார்.  மேலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தானும் காவலன் செயலியை பயன்படுத்துவதாகவும் குஷ்பூ கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது என்றார். மேலும்,  பொள்ளாச்சி விவகாரத்தில் ஆதாரம் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது, நிர்பயா நிதியை எப்படி பயன்படுத்துவது என தெரியாத அளவுக்கு மோசமான நிலை தான் தமிழகத்தில் உள்ளது என குற்றம்சாட்டினார். மேலும், பெண்களுக்கு எதிரானவற்றை தவறு இல்லை என திரைப்படங்கள் காட்டுவதாகவும் திரைப்படத்துறைக்கு பொறுப்புணர்ச்சி வேண்டும் என்றும் கனிமொழி பேசினார்.  

மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

விருதுநகர் அருகே மக்காச்சோளக்காட்டில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அருப்புக்கோட்டை அருகே பரளச்சி ராணி சேதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியபாமா. இவர் நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு நள்ளிரவு நேரம் வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் இரவு முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தேடியநிலையில் மறுநாள் காலை மக்காச்சோளக்காட்டில் சத்தியபாமா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சத்தியபாமா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதாவது, அதே ஊரை சேர்ந்த சோலையப்பனுக்கும் சத்தியபாமாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சோலையப்பன் வழக்கம் போல் சத்தியபாமாவை சந்திக்க சோளக்காட்டுக்கு வரச்சொன்னதாக கூறப்படுகிறது. இதை கண்காணித்த அதே ஊரை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளான நாகநாதன், முத்துமணி ஆகிய மூவரும் சத்தியபாமாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். 

 ஆனால்சத்தியபாமா கூச்சலிடவே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் உனக்கும் இதே கதிதான் என்று சோலையப்பனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சோலையப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அழகர்சாமியையும் நாகநாதனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் முத்துமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Friday, December 13, 2019

நித்தியின் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த மாடல் மா பக்தி பிரியானந்தா!

யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்' பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார்.

நித்யானந்தாவின் ஆஸ்தான பெண் சீடர்களில் முக்கியமானவர், மா பக்தி பிரியானந்தா. மாடலிங் துறையிலிருந்து சந்நியாசியாக மாறியவர். பெண் சந்நியாசியாக இவர் இருந்தாலும், அதிலும் மாடலிங்கைப் புகுத்தி நித்தியின் பல்வேறு லீலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்' பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார் நித்யானந்தா என்கிறார்கள்.

நித்யானந்தாவின் ஆஸ்தான பெண் சீடர்களில் முக்கியமானவர், மா பக்தி பிரியானந்தா. மாடலிங் துறையிலிருந்து சந்நியாசியாக மாறியவர். பெண் சந்நியாசியாக இவர் இருந்தாலும், அதிலும் மாடலிங்கைப் புகுத்தி நித்தியின் பல்வேறு லீலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்' பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார் நித்யானந்தா என்கிறார்கள்.

''நித்யானந்தா ஆசிரமத்துக்கு வரும் வி.ஐ.பி-கள், அங்கு சொல்லித்தரும் பயிற்சிகளை சில நாள்களில் கற்றுக்கொள்வார்கள். அவர்களிடம் நித்யானந்தா, 'தொடர்ந்து இந்தப் பயிற்சியை உங்கள் வீட்டுக்கே வந்து நமது சந்நியாசிகள் சொல்லித் தருவார்கள்' என்று நயமாகப் பேசுவார்.

வி.ஐ.பி-கள் வீட்டுக்கு மாடலிங் அழகியான பக்தி பிரியானந்தாவோடு மேலும் சில பெண் சீடர்களையும் அனுப்பி, யோகக் கலையைக் கற்றுத்தரச் சொல்வார். அப்படி கற்றும்தரும்போது தங்கள் வலையில் விழும் நபர்களைவைத்து, பல கோடி ரூபாய் மடத்துக்கு நன்கொடையாகப் பெற்று வந்துவிடுவார்கள்'' என்கிறார்கள் ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள்.

நித்தியின் லீலைகளுக்கு உடந்தை... 'பவர்ஃபுல்' மாடல் மா பக்தி பிரியானந்தா!
குஜராத் மாநிலத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த மாதம் குஜராத் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது குழந்தைகளை அனுமதியின்றி ஆசிரமத்தில் வைத்திருந்ததாக ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகிய இருவரை கைதுசெய்தது குஜராத் காவல்துறை.

அத்துடன் அந்த ஆசிரமத்திலிருந்து லேப்டாப், டேப், செல்போன் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர் குஜராத் காவல்துறையினர். அந்த லேப்டாப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளனவாம். குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற பல தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் பெண் சீடர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன.




கடலூரில் கணவரை தாக்கி கர்ப்பிணியை காரில் கடத்தி கற்பழிப்பு!

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 


காரில் வந்த முன்று பேர் கொண்ட கும்பல் தம்பதியை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியது. இதையடுத்து மர்மகும்பல் அந்த பெண்ணை காரில் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றது. அங்கு வைத்து முன்று பேரும் அந்த பெண்ணை கற்பழித்தனர்.


அந்த பெண்ணை மீண்டும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் விட்டு சென்றனர். இதுதொடர்பாக அந்த பெண் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை தாக்கி விட்டு கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று மர்மகும்பல் கற்பழித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிறுமியை சீரழித்தவர்.. குமுறி எடுத்த மக்கள்!

இதோ இப்படி குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடக்கிறாரே.. இவர்தான் 11 வயது பெண்ணை வயக்காட்டில் வைத்து பாலியல் தொல்லை தந்தவர்.. மக்கள் குமுறி எடுத்துவிடவும், ஆஸ்பத்திரியில் இந்த கோலத்தில் கிடக்கிறார். குடியாத்தத்தை அடுத்துள்ள மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 11 வயதாகிறது.



குடியாத்தத்தை அடுத்த குளிதிகை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 30 வயதாகும் இந்த இளைஞர் நேற்று மதியம் 3.30 மணிக்கு இந்த பெண்ணின் ஸ்கூலுக்கு போயுள்ளார். நேராக ஹெச்.எம்-மிடமே சென்றுவிட்டார் வினோத்.. தன்னை சிறுமியின் உறவினர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். "இவளோட அப்பாவுக்கு திடீர்ன்னு அடிபட்டுடுச்சு.. உடனே கூட்டிட்டு வர சொன்னார்" என்று சொல்லவும், ஹெச்.எம் அதை நம்பி பதறி போய், சிறுமியை அந்த இளைஞருடன் அனுப்பி வைத்தார்.

பிறகு பைக்கில் சிறுமியை அழைத்து செல்லப்பட்டதும், சிறுமியின் தந்தைக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க ஹெச்.எம். போன் செய்தார். போனை சிறுமியின் தந்தைதான் எடுத்தார்.. "அடிபட்டதா சொன்னாங்களே.. எப்படி இருக்கு"? என்று கேட்கவும், "எனக்கு ஒன்னுமில்லையே, நான் நல்லாதான் இருக்கேன்" என்றார் அவர்.


அப்போதுதான் மாணவியை கடத்திய விஷயம் தெரியவந்தது.. உடனடியாக சிறுமியை ஊர்மக்கள், மாணவர்கள் தேட ஆரம்பித்தனர். அந்த சமயம், கிராமத்தில் இருந்த ஒரு ஓடை பகுதியில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது.. சிறுமியை இந்த பகுதிக்கு அழைத்து வந்து.. மிரட்டி பலாத்காரம் செய்யும் வன்முறையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் வினோத். இதை கண்டு கிராம மக்கள் கொதித்துபோய், வினோத்தை நைய புடைத்துவிட்டனர். உடம்பெல்லாம் காயமடையவும், குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் மீது குடியாத்தம் மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

சரவண பவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கி தந்த ஜீவஜோதி விரைவில் பாஜவில் ஐக்கியம்

சரவண பவன் ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்து கொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தினார். இதில் வெற்றி பெற்ற ஜீவஜோதி, ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தமிழக அளவில் பரீட்சயமான நபராக மாறினார்.



இந்நிலையில் தற்போது மறுமணம் செய்து கொண்டு கணவர் மற்றும் தாயாருடன் தஞ்சையில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும் மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருவதுடன் மணப்பெண்களுக்கான ஆடை டிசைனிங் பணிகளையும் கவனித்து வருகிறார். தற்போது, ஜீவஜோதி பாஜவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் பாஜவில் சேர உள்ளது உறுதியாகியுள்ளது.


பாஜவில் இணையுமாறு கருப்பு முருகானந்தம் அவரை அணுகி பேசியுள்ளார். இதையடுத்து சென்னையில் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய ஜீவஜோதி பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். போராட்டக் குணம் மிக்க பெண்கள் பாஜவில் இணைய வேண்டும் என்று வானதி சீனிவாசன் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பாஜவில் இணைய ஜீவஜோதி முடிவெடுத்துள்ளார். எனவே, விரைவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜீவஜோதி பாஜவில் இணைகிறார்.

Actress Raai Lakshmi in sweemsuit

The moon only glows when kissed by the sun 💝 #SunKissed 💝💋 

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளின் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலை பெற்றுள்ளார். 

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. அந்த பட்டியலில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 40வது இடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் 42வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய பெண்மணிகளான, HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகளுமான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தையும், பயோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரண் மஜூம்தார் 65வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இரண்டாம் இடத்தையும், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  

என்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கபட்டுள்ளதால், தன்னை விடுதலை செய்ய கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு.




#CitizenshipBill | #DMKProtest | #UdhayanidhiStalin

ரஜினியை கைகழுவிய மோடி !

எழுபதாவது பிறந்த நாளை எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார் ரஜினி.

 அதாவது ரஜினி சார்பில் முதன்முதலாக லதா ரஜினிகாந்த் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியிருக்கிறார். வழக்கமாக ரஜினி வீட்டு வாசலில் காத்திருக்கும் நிருபர்களுக்கும் ரசிகர்களுக்கும் குடிக்க தண்ணீர்கூட தரமாட்டார்கள். இந்த ஆண்டு புதுமையாக இனிப்பு வழங்கியது அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. இந்த நிலையில், அதிகாலை முதல் எதிர்பார்த்த வாழ்த்து அழைப்பு மட்டும் வரவே இல்லை என்பதுதான் ரஜினியின் பெருங்கவலையாக மாறியிருக்கிறது.


ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாக ரஜினிகாந்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பவர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி. அவர் இந்த ஆண்டு வாழ்த்து சொல்லவில்லை என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.


அவர் மட்டுமல்ல மோடியின் தமிழகப் பிள்ளைகளான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களும் வாழ்த்து சொல்லவில்லை. ரஜினிக்கு நாட்டின் உயர் விருது கொடுத்த பிறகும், அவர் இன்னமும் அமைதியாக இருப்பதை கண்டு பா.ஜ.க. கடுப்பாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பிரச்னை என்றால் ரஜினிகாந்த் என்ன செய்வார் என்று அவரது நெருங்கிய தோழர் ஒருவர் சொல்லும் தகவல் என்ன தெரியுமா?

எந்த நேரமும் பா.ஜ.க.வின் திட்டம் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவாக ரஜினி பேசுவார் என்கிறார்கள்.
அதையும்தான் பார்த்துவிடலாம்.

பெண் பார்க்க வந்ததோ அக்காவை..! ஆனால் மாப்பிள்ளை கற்பழித்ததோ தங்கையை!

ஐதராபாத்: அக்காவை பெண் பார்க்க வந்த இளைஞர் தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர், நிஜாமாபாத் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியபடி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில், மூத்தவர் ஆன்லைன் திருமண இணையதளத்தில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதன்பேரில் விசாகப்பட்டினம், நதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்சந்து என்பவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.



கடந்த 30ம் தேதி பெண் பார்க்க ஜெய்சந்து நேரில் வந்திருக்கிறார். இதையொட்டி, அந்த பெண் பியூட்டி பார்லர் சென்றுவிட்டதால், வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்த ஜெய்சந்து, தங்கையின் அழகில் மயங்கியுள்ளார். இதையடுத்து, நைசாக பேசியபடி வீட்டின் உள்ளே நுழைந்து, தங்கையை அடித்து உதைத்துள்ளார். பிறகு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டாராம்.


இதற்கிடையே, பியூட்டி பார்லர் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்கா, தனது தங்கையின் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்கையை மயக்கம் தெளிய வைத்து விசயத்தை கேட்டுள்ளார். இதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் பதுங்கியிருந்த ஜெய்சந்துவை கைது செய்தனர்.


கடந்த 30ம் தேதி பெண் பார்க்க ஜெய்சந்து நேரில் வந்திருக்கிறார். இதையொட்டி, அந்த பெண் பியூட்டி பார்லர் சென்றுவிட்டதால், வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்த ஜெய்சந்து, தங்கையின் அழகில் மயங்கியுள்ளார். இதையடுத்து, நைசாக பேசியபடி வீட்டின் உள்ளே நுழைந்து, தங்கையை அடித்து உதைத்துள்ளார். பிறகு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டாராம்.


இதற்கிடையே, பியூட்டி பார்லர் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்கா, தனது தங்கையின் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்கையை மயக்கம் தெளிய வைத்து விசயத்தை கேட்டுள்ளார். இதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் பதுங்கியிருந்த ஜெய்சந்துவை கைது செய்தனர்.


குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன?

குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பதை தற்போது காணலாம்

2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ\' சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

➤ அதன்படி முதல்முறையாக குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

➤ தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

➤ குழந்தைகள் ஆபாச படத்தை வலைதளங்கள் மூலமாக பகிரும் நபர்களுக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

➤ குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

➤ புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.

➤ குழந்தைகளை வைத்து படம் நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும் கூட, அது சட்ட விரோதம் என்றே கூறப்படுகிறது.


5 மாத கர்ப்பிணியை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது!

கடலூர் அருகே 5 மாத கர்ப்பிணியை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற இளம்பெண், தமது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடலூர் புதுநகர் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் படம் பார்க்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெகனுடன் சென்றுள்ளார். 

அங்கு வந்த திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த 4 பேர், ஜெயப்பிரதாவிடம் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களிடம் ஜெயப்பிரதா தனது காலணியால் அடிப்பேன் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும், ஜெயப்பிரதாவை காரில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட ஜெயப்பிரதாவுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்ப்பிணியை துன்புறுத்திய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது

   குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக இளைஞரணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் பேரணி மற்றும் நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின்‌ இளைஞரணி செயலாளர் உதயநிதி‌ ஸ்டாலின் உள்‌பட ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். திமுக மாவட்ட அலுவலகத்தில் தொடங்கிய‌ பேரணி பனகல் பூங்காவில் முடிவடைந்தது.

 

‌அப்போது குடியுரிமை சட்‌டத்தில் திருத்தம் கொண்டுவந்த மத்திய அரசு மற்றும் அதற்கு ‌ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள்‌ எழுப்பப்பட்டன‌. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. குடியுரிமை சட்ட நகல்களை கிழித்து, திமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.  

சபரிமலை செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது- உச்சநீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் தற்போதைய சூழலில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கு விசாரணையை 7 பேர் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில் சபரிமலைக்கு அவ்வப்போது பெண்கள் செல்ல முயன்று வரும் நிலையில், சபரிமலை வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கேரள அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில் சபரிமலை செல்வதற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, பாத்திமா, பிந்து உள்ளிட்ட மூன்று பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தற்போதைய சூழலில் சபரிமலை செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே பாதுகாப்பு கோரிய பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே உத்தரவிட்டார். 

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து விசாரணை

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.\r\n\r\n\r\nஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தது தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு ,கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக பல ஐபி அட்ரஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் குழுவில் உள்ள 100 பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரம் பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

Popular Posts