Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Showing posts with label கற்பழிப்பு. Show all posts

Friday, December 13, 2019

கடலூரில் கணவரை தாக்கி கர்ப்பிணியை காரில் கடத்தி கற்பழிப்பு!

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 


காரில் வந்த முன்று பேர் கொண்ட கும்பல் தம்பதியை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியது. இதையடுத்து மர்மகும்பல் அந்த பெண்ணை காரில் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றது. அங்கு வைத்து முன்று பேரும் அந்த பெண்ணை கற்பழித்தனர்.


அந்த பெண்ணை மீண்டும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் விட்டு சென்றனர். இதுதொடர்பாக அந்த பெண் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை தாக்கி விட்டு கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று மர்மகும்பல் கற்பழித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Popular Posts