குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடும் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. சென்னைப் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் திருச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் அளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதேபோல் கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுக்க இந்த விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என ...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
No comments:
Post a Comment