பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனே சுட்டுத் தள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு ரயில்வே துறை ???ணையமைச்சர் சுரேஷ் அங்காடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமாகியுள்ளது. இந்த நிலையில், இச்சட்டம் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பூகோளரீதியாக வங்கதேச எல்லையை ஒட்டிய மாநிலமான மேற்கு வங்கத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றுவதைப் போல, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது, டெல்லி போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் சுட்டதில் இந்த மூன்று பேரும் இறந்தனர். தலைநகர் டெல்லியில் மூன்று பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஒரு காவல் நிலையமே திங்கள்கிழமை இரவு தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு தில்லி பகுதியில் இன்று மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி அதிரடியாக அறிவுறுத்தல் ஒன்றை அளித்துள்ளார???. ரயில்வே துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அளித்துள்ள அறிவுறுத்தலில், "போராட்டத்தின்போது ரயில்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டவுடன் சுட்டுத் தள்ளுங்கள் " என அமைச்சர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment