நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மாணிக்கவேல். மாணிக்கவேலுக்கும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பெண்ணின் அண்ணன் மாணிக்கவேல் வீட்டிற்கு சென்று அவரது தாயிடம் என் தங்கையிடம் உன் மகன் பழகுவதை விட்டுவிட சொல் என மிரட்டி உள்ளார். அன்று இரவிலிருந்தே மாணிக்கவேல் காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். பின்னர் எர்ரம்பட்டி அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் மாணிக்கவேல் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அதியமான்கோட்டை காவல்துறையினர் மாணிக்கவேல் வயிற்று வலிகாரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு மாணிக்கவேலின் உறவினர்கள், மாணிக்கவேல் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் எனவும், காவல்துறையினர் முழு விசாரணை செய்யாமலே தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது என குற்றம் சாட்டினர். மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என மாணிக்கவேல் உறவினர்கள், அதியமான் கோட்டை காவல்நிலையம் முன்பு சுமார??? 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நேரில் வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, மர்மமான முறையில் இறந்த மாணிக்கவேலுவின் மரணத்தை முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரதத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என ...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
No comments:
Post a Comment