சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் என பிரதமர் நித்தியானந்தா என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவதாக கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை எனக் கூறிய சீமான், தங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்து தனக்கே உரிய பானியில் சிரித்தார்.
இதற்கு கைலாசா பிரதமர் நித்தியானந்தா என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்" என பதிவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment