"தேவி.. நீதான் என் ஹீரோயின்"ன்னு சொன்னார்.. அதனால நெருங்கி பழகினேன்.. ஆனா கடைசியில இப்படி ஆயிடுச்சு" என்று துணை நடிகை தேவி வாக்குமூலம் தந்துள்ளார். சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவிதான் தேவி.. சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.. நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கும் ரவி என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.. ரவியும் துணை நடிகர்தானாம்.. இந்த விஷயம் சங்கருக்கு தெரியவந்ததும், தேவியை கண்டித்தார். அதனால், தேவி, ரவியுடன் பழகுவதை நிறுத்திகொண்டார்.. இதனால் ரவி கடுப்பானார்... தேவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். 2 வருடங்களாக ரவியுடன் பேச்சுவார்த்தையும் இல்லை.. எனினும் தேவி வீட்டுக்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்தார். இதனால் போன் நம்பரையும் மாற்றிவிட்டார், வீட்டையும் மாற்றிவிட்டார் தேவி. இந்த நிலையில் கொளத்தூரில் உள்ள தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு ரவி குடிபோதையில் சென்று கதவை தட்டி தகராறு செய்துள்ளார். "தேவியின் அட்ரஸ் என்ன.." என்று கேட்டு லட்சுமியின் குழந்தையின் கழுத்தையும் பிடித்து நெரித்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தேவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். லட்சுமி வீட்டில் ரவி சென்று தகராறு செய்தவதை கேள்விப்பட்ட தேவி, கணவன் சங்கருடன் அங்கு சென்றார். தேவி, சங்கர், லட்சுமி, லட்சுமியின் கணவர் சவாரியா 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டையாலேயே சரமாரியாக அடித்தனர்.. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் போலீஸ் ஸ்டேஷனில் ரவியை கொன்றுவிட்டோம் என்று கூறி சரணடைந்தனர். இது சம்பந்தமாக தேவி தந்த வாக்குமூலம் இதுதான்: "நான் சினிமா, சீரியல்களில் நடித்து வருகிறேன். 8 வருஷத்துக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கின்போதுதான் ரவியை எனக்கு தெரியும்.. அவரும் துணை நடிகர்தான்.. அடிக்கடி என் வீட்டிற்கு என்னை சந்திக்க வருவார். ஒருநாள் திடீர்ன்னு "நான் படம் எடுக்க போறேன்.. டைரக்ட் செய்யலாம்னு இருக்கேன்.. உன்னை ஹீரோயின் ஆக்கிடறேன்" என்று ரவி சொன்னார்.. அதை நம்பிதான் நானும் அவருடன் பழகினேன். ஆனால், அவர் வீட்டுக்கு அடிக்கடி வரவும், குடும்பத்தில் பிரச்சனை வந்தது.. ஆனால் எங்களுக்குள் எந்த விரிசலும் வரவில்லை..இதுக்கு பிறகு அவருக்கு சான்ஸ் எதுவும் நடிக்க வரவில்லை.. அதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.. அடிக்கடி குடிச்சிட்டு வந்து தொல்லை தர ஆரம்பிச்சார்.. வேற வீட்டுக்கு மாறி போனதால், என் தங்கச்சி லட்சுமி வீட்டுக்கு போய் தகராறு செய்திருக்கிறார்.. என் தங்கச்சி மகள் கழுத்தை நெரித்ததால் ஆத்திரத்தில் நாங்கள், கட்டையால் அடித்து கொன்றோம்" என்று வாக்குமூலம் தந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Actress Nivedhithaa Sathish latest photo shoot collection
-
Draupathi Day 5 Collection: Richard Rishi’s Tamil Film Makes a Mark At Box Office Richard Rishi and Sheela Rajkumar starrer controversial...
-
#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி...
-
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பத...
-
Keerthy Suresh is one of the talented actors in the tinsel town. After Mahanati, the craze of the actress has entered to an altogether new z...
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி! தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு...
-
தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் த...
No comments:
Post a Comment