Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

Tuesday, March 10, 2020

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் - எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று சொல்கிறார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இறங்கியிருக்க வேணடும்.


சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தற்போது காலம் கடந்து விட்டது 69வது வயதில் அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவர் அரசியலுக்கு வருவதைப் பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார்.

ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

Friday, March 6, 2020

ரஜினிகாந்த் கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த்  தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.  



இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது.  வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.  பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்த நிலையில் தற்போதைய நகர்வுகள் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.  

Friday, December 13, 2019

ரஜினியை கைகழுவிய மோடி !

எழுபதாவது பிறந்த நாளை எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார் ரஜினி.

 அதாவது ரஜினி சார்பில் முதன்முதலாக லதா ரஜினிகாந்த் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியிருக்கிறார். வழக்கமாக ரஜினி வீட்டு வாசலில் காத்திருக்கும் நிருபர்களுக்கும் ரசிகர்களுக்கும் குடிக்க தண்ணீர்கூட தரமாட்டார்கள். இந்த ஆண்டு புதுமையாக இனிப்பு வழங்கியது அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. இந்த நிலையில், அதிகாலை முதல் எதிர்பார்த்த வாழ்த்து அழைப்பு மட்டும் வரவே இல்லை என்பதுதான் ரஜினியின் பெருங்கவலையாக மாறியிருக்கிறது.


ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாக ரஜினிகாந்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பவர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி. அவர் இந்த ஆண்டு வாழ்த்து சொல்லவில்லை என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.


அவர் மட்டுமல்ல மோடியின் தமிழகப் பிள்ளைகளான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களும் வாழ்த்து சொல்லவில்லை. ரஜினிக்கு நாட்டின் உயர் விருது கொடுத்த பிறகும், அவர் இன்னமும் அமைதியாக இருப்பதை கண்டு பா.ஜ.க. கடுப்பாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பிரச்னை என்றால் ரஜினிகாந்த் என்ன செய்வார் என்று அவரது நெருங்கிய தோழர் ஒருவர் சொல்லும் தகவல் என்ன தெரியுமா?

எந்த நேரமும் பா.ஜ.க.வின் திட்டம் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவாக ரஜினி பேசுவார் என்கிறார்கள்.
அதையும்தான் பார்த்துவிடலாம்.

Popular Posts