பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், திருத்தப்பட்ட சட்டம் மூலம் வழங்கும் குடியுரிமை தங்களுக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அல்லாத பிறருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. இந்து, புத்தம், கிறிஸ்துவம், பார்சி, சமணம் என எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் இந்தியக் குடியுரிமை கிடைக்க உதவுகிறது. ஆனால் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்க்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவருக்கும் எந்தவித ஆணவணத்தையும் சமர்ப்பிக்காமலே குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இந்நிலையில், இதை எதிர்த்துள்ள பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசார் மங்களானி, "பாகிஸ்தானிய இந்துக்கள் ஒருமித்த கருத்துடன் இந்தியாவின் குட???யுரிமைச் சட்டத்திருத்தத்தை நிராகரிக்கிறோம். இது சமூகப் பாகுபாடுகளால் இந்தியாவை பிரிவினையை நோக்கி இட்டுச்செல்லும்" எனக் கூறியிருக்கிறார். "இது இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தான் இந்துக்களின் ஒருமித்த கருத்து. உண்மையான இந்துவால் இந்தச் சட்டத்தை ஒருபோது ஆதரிக்க முடியாது." எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே இந்தச் சட்டம் மீறியிருக்கிறது எனவும் அவர் விமர்சித்தார். இது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டீன் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் சீக்கிய சமூகத்தினரும் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பை கூறியுள்ளனர். "பாகிஸ்தான் சிக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள சீக்கிய சமுதாயமும் இதனைக் கண்டிக்கிறது" என பாபா குரு நானக் அமைப்பின் தலைவர் கோபால் சிங் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சிறுபான்மையினராகவே உள்ளனர். அவர்களில் ஒருவர் என்ற முறையின் முஸ்லிம்களின் அச்சத்தைப் புரிந்துகொள்கிறேன்." எனவும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என ...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
No comments:
Post a Comment