சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் சாமியார் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய சர்ச்சை பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து நித்யானந்தா மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் பாலியல் வழக்கு ஒன்றில் கர்நாடக போலீசாரும் நித்யானந்தாவை தேடி வருகின்றனர். இந்த சூழலில் தனது சிஷ்யர்களுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஈக்வெடார் நாட்டிற்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு 'கைலாசா' என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதாவது 'கைலாசா'வை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை கேட்டு 'ஆன்லைன்' மூலம் பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தீவில் செல்லப் பிராணிகளுக்கும் இடமுண்டு என்றெல்லாம் கூறி வந்தார். சமீபத்தில் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காதே குற்றப்பிரிவுகளே இல்லை. ஆனால் அனைத்திலும் நான் நிரபராதி என்று நிரூபித்து வந்துள்ளேன். ஆன்மீகத் துறையில் எப்போதே தலைவனாகி விட்டேன். என்னை பற்றி மீம்ஸ் போடும் மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். தற்போது என்னை பற்றி அதிகமாக ஊடகங்கள் பேசி வருகின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்ற காமெடியை போல் எனது நிலை ஆகிவிட்டது. கைலாசா நாட்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இங்கு வசிக்க 40 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே கைலாசத்தை அமைத்தே தீருவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் பெங்களூரு போலீசாருக்கு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் என்ன பதில் அளிக்கப் போகின்றனர்? வேறு ஏதேனும் தீர்வு வைத்திருக்கின்றனரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என ...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
No comments:
Post a Comment