Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Wednesday, March 11, 2020

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமனம்!

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் ஜேபி நட்டா உத்தரவை வழங்கினார்.


செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல் முருகன், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எல் படிப்பும் முடித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டம் தொடர்பான பிஎச்டி பட்டம் படித்து வருகிறார். இவர் 1977-ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பிறந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ரேஸில் இருந்தனர். அப்போது ரஜினிகாந்த் கூட அப்பதவிக்கு வரலாம் என சொல்லப்பட்டது. தமிழக பாஜகவின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்‌டம் சென்னையில் நடந்தது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவராக குப்புராமு நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்டது. இது போன்று பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் இன்று ஒருவழியாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Friday, December 13, 2019

சரவண பவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கி தந்த ஜீவஜோதி விரைவில் பாஜவில் ஐக்கியம்

சரவண பவன் ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்து கொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தினார். இதில் வெற்றி பெற்ற ஜீவஜோதி, ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தமிழக அளவில் பரீட்சயமான நபராக மாறினார்.



இந்நிலையில் தற்போது மறுமணம் செய்து கொண்டு கணவர் மற்றும் தாயாருடன் தஞ்சையில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும் மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருவதுடன் மணப்பெண்களுக்கான ஆடை டிசைனிங் பணிகளையும் கவனித்து வருகிறார். தற்போது, ஜீவஜோதி பாஜவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் பாஜவில் சேர உள்ளது உறுதியாகியுள்ளது.


பாஜவில் இணையுமாறு கருப்பு முருகானந்தம் அவரை அணுகி பேசியுள்ளார். இதையடுத்து சென்னையில் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய ஜீவஜோதி பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். போராட்டக் குணம் மிக்க பெண்கள் பாஜவில் இணைய வேண்டும் என்று வானதி சீனிவாசன் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பாஜவில் இணைய ஜீவஜோதி முடிவெடுத்துள்ளார். எனவே, விரைவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜீவஜோதி பாஜவில் இணைகிறார்.

Popular Posts