திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பேசியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய குஷ்பூ, பெண்கள் பாதுகாப்பில் சென்னையை போல வேறு நகரம் இல்லை என்றும் ஆனால் சென்னையிலும் பிரச்னைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தானும் காவலன் செயலியை பயன்படுத்துவதாகவும் குஷ்பூ கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது என்றார். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் ஆதாரம் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது, நிர்பயா நிதியை எப்படி பயன்படுத்துவது என தெரியாத அளவுக்கு மோசமான நிலை தான் தமிழகத்தில் உள்ளது என குற்றம்சாட்டினார். மேலும், பெண்களுக்கு எதிரானவற்றை தவறு இல்லை என திரைப்படங்கள் காட்டுவதாகவும் திரைப்படத்துறைக்கு பொறுப்புணர்ச்சி வேண்டும் என்றும் கனிமொழி பேசினார்.
No comments:
Post a Comment