அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A01! பட்ஜெட் விலையில் இன்பினிட்டி வி-டிஸ்பிளே + 3000mAh பேட்டரி!
சுவாரசியமாக கேலக்ஸி ஏ01 ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு மற்றும் பின்புறத்தில் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கியமான அம்சங்களை பொறுத்தவரை, இதன் 5.7 இன்???் எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 8 ஜிபி வரை ரேம், சேமிப்பக விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3,000 எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கூறலாம். விலை மற்றும் விற்பனை பற்றி... தற்போது வரையிலாக சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. ஆனால் எந்த சந்தை முதலில் வெளியிடப்படும் என்பது தெரியவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடிவமைப்பு பற்றி... புதிய ஸ்மார்ட்போனின் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவின் கீழே சிறிய அளவிலான கன்னப்பகுதியை காண முடிகிறது. பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பிற்கு கீழே செங்குத்தாக ஒரு ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மாட்யூல் ஆனது பின் பேனலின் மேல் இடது விளிம்பில் வைக்கப்படுகிறது. பவர் பட்டன் ஆனது டிஸ்பிளேவின் வலது விளிம்பிலும், அதே சமயம் வால்யூம் கண்ட்ரோல் பட்டன் ஆனது இடது விளிம்பிலும் அமைந்திருக்கிறது.
வெளியான புகைப்படங்களின் வெளியாக இதன் கைரேகை சென்சாரை கண்டுபிடிக்க முடியவில்லை. டிஸ்பிளே, ப்ராசஸர் & மெமரி பற்றி... சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பட்டியலிடவில்லை இருப்பினும் சில பிரதான அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது 5.7 இன்ச் அளவிலான எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டா கோர் (குவாட் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் + குவாட் 1.45 ஜிகாஹெர்ட்ஸ்) எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பங்களில் வருகிறது, 128 ???ிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ளது. உடன் மெமரி விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது.
கேமரத்துறை பற்றி... சாம்சங் கேலக்ஸி ஏ01 அதன் பின்புறத்தில் உள்ள டூயல் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அளவிலான பிரதான கேமரா + 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) அளவிலான இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 5 மெகாபிக்சல் (எஃப் / 2.0) அளவிலான கேமராவை கொண்டுள்ளது. பேட்டரி பற்றி... சாம்சங் கேலக்ஸி A01 ஆனது ஒரு 3,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இரட்டை சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் FM ரேடியோவையும் ஆதரிக்கிறது. சென்சார்களை பொறுத்தவரை ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார் மற்றும் ஆக்ஸலரோமீட்டர் போன்றவைகளை கொண்டுள்ளது.
No comments:
Post a Comment