மறைந்த புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு வெளியான படம் 'மகாநடி'. இந்த படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த தேசிய விருது விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கைகளில் இருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார் கீர்த்தி சுரேஷ். விருதைப் பெற்றுக்கொண்டு, 'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
No comments:
Post a Comment