Friday, December 13, 2019

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளின் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலை பெற்றுள்ளார். 

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. அந்த பட்டியலில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 40வது இடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் 42வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய பெண்மணிகளான, HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகளுமான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தையும், பயோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரண் மஜூம்தார் 65வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இரண்டாம் இடத்தையும், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  

No comments:

Post a Comment

Popular Posts