பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதாவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்புதலுக்கு வந்த மசோதாவை, நள்ளிரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தர். இதனால் சட்டமாக்கப்பட்டது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களைத் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு ஆதரவாக இருப்பதால் பெரிய போராட்டம் வராது எனக் கணிக்கப்பட்டது.
எனினும், பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதாலும் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் போது ஆங்காங்கே வன்முறைகளும் கட்டவிழ்த்து விட???்படுகின்றன. அசாம் மாநிலத்தில் 5 பேர் மரணத்திற்குப் பின் இன்று நிலை சீராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று முதல் இணையத்தள சேவையை அரசு மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் திரிபுரா, மேகாலயா, மேற்குவங்கம் என இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர்ந்து இன்றும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#isupportcaaprotest என்ற ஹேஸ் டேக் பிரபலமடைந்து வருகிறது. டில்லியில் 2வது நாளாக இன்று நடந்த போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சில இடங்களில், போராட்டக்காரர்கள் காவல் துறையினரைச் சிறை பிடித்து வைத்தனர். தமிழ்நாட்டில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துத் தொடங்கிய போராட்டம் சற்று விரிவடைந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதே வேளையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2வது நாளாகப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்புக் குரல் காரணமாக, பல்கலைக்கழகத்தை 23ஆம் தேதி வரை மூடி வைக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 23ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இப்போது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் கலைப்பு தெரியாமலிருக்கக் கானா பாட்டுக்களைப் பாடிக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். த???ிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் சென்னை ஐ.ஐ.டி., மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment