Sunday, March 15, 2020

நண்பர் தல அஜித் மாதிரி வாழ ஆசைப்படும் விஜய்!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் முதல் முறையாக கோட் சூட் அணிந்து வந்த விஜய், நண்பர் அஜித் மாதிரி உடையணிந்து வந்திருப்பதாக மேடையிலேயே தெரிவித்தார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், “மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக்கனுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.


மேலும் விஜய் பேசுகையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. நம்மை பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பாலேயே கொல்ல வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் எனில் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். நண்பர் அஜித் மாதிரி இந்நிகழ்வுக்கு கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறதா? விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார்” என்றார்.


இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில் உள்ள விஜய்யிடம் 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன் என்றார்.


No comments:

Post a Comment

Popular Posts