துபாய் வழியாக சென்னை வந்த விமானத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிறுவனத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
துபாய் வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 5 பெண்கள், 9 ஆண்கள். இவா்களில் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் 9 பேரும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 3 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேரும் ஆவர்.
தமிழகத்தை சோ்ந்தவா்களில் 7 போ் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா அறிகுறி உள்ள 14 பேரும் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவா்கள்.
இவா்கள் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மன், சுவிட்சா்லாந்து நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக சொந்த நாட்டிற்கு துபாய் வழியாக வந்துள்ளனா். இவா்கள் 14 பேருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் சுமார் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மேலும் கூடுதலாக ஆட்கள் வந்தால் அவர்களையும் தங்க வைக்க இட வசதி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் வெளிநாட்டில் வேலை செய்தவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் அடங்கும். இதன் காரணமாக வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment