சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது. முதலில் சீனாவில் ஆயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி வருகிறார். மேலும் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என குறை கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சியின் படி கொரோனா வைரஸ் எங்கு, எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும், சீனாவின் வுகான் மாகாணத்திலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் சீனா தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றும், கொரோனா வைரஸால் சீன மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment