இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மரணடைந்துள்ளார். டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 68 வயதான மூதாட்டி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகன் மூலம் வைரஸ் பரவியிருந்தது. இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த முதியவர் ஏற்கெனவே மரணமடைந்திருந்தார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 82 ஆக இருந்தது.
டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் புதிதாக மேலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநிலங்கள் முடுக்கி விட்டுள்ளன.
கர்நாடகாவில் வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன. கண்காட்சிகள், திருமணங்கள், மாநாடுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
மும்பை, நவி மும்பை, நாக்பூர் உள்ளிட்ட 5 மகாராஷ்டிர நகரங்களில் நேற்றிரவு முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பள்ளிகள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி, கை சுத்திகரிப்பு திரவம் ஆகியவற்றை வரும் ஜூன் மாதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
இதன் மூலம் அவற்றை பதுக்கி வைப்பது குற்றமாக கருதப்படும் என்பதோடு மட்டுமின்றி கூடுதல் விலைக்கு விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பீதியால் வரும் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நாளையும் கொல்கத்தாவில் வரும் 18 ஆம் தேதியும் நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ம் தேதி பிரான்ஸ், இலங்கை, உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவையை ஏப்ரல் 30 வரை ரத்து செய்துள்ளது.
இதனிடையே, கொரோனா குறித்து காணொலிக் காட்சி மூலம் விவாதிக்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் தெற்கு ஆசியாவில் வசித்து வருவதாகவும் நமது மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment