கூட்டமாக இருக்காதீர்கள், ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு பேசாதீர்கள், 6 அடி தள்ளியே பேசுங்கள், கை குலுக்காதீர்கள்...இப்படி மனிதனுக்கு மனிதனே எதிரி என்பது போல் ஆக்கிவிட்டது கொரோனா அச்சம்.
என்னதான் பாதுகாப்புகள் கருதி இதையெல்லாம் பின்பற்றினாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். இந்நிலையில் தன் காதல் மனைவியை, அன்புக் காதலனைக் கட்டியனைத்து முத்தம் கொடுத்தால் கூட தவறா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்
கொரோனா வைரஸே தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறி தெரிய குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் உங்கள் அன்புத் துணைக்கும் இருந்தால் ..?
கொரோனா வைரஸ் உடலுறவு கொள்வதால் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கருத்தரித்தலும் பாதுகாப்பனதா என்பதும் உறுதியளிக்கவில்லை. இருப்பினும் கொரோனா தொடுதல், இருமல் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்து உங்களுடைய பாலுணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
எச்சில் துப்புதலும் தவறே என்று கூறிவரும் நிலையில் உதட்டோடு உதடு முத்தம் தருதலும் ஆபத்துதான். அதற்காக இந்த வைரஸ் தொண்டை வழியாகப் பரவுதல் என்பது அர்த்தமல்ல. எந்த விஷயம் உங்களை அடிக்கடி பாலியல் உணர்ச்சிகளுக்குத் தூண்டுகிறதோ அதில் கவனம் மிக மிக அவசியம். அதேபோல் உடலுறவு மூலமாகவும் பரவுகிறது என்பதற்கும் எந்தவித ஆதாரங்களும் இதுவரை இல்லை. இருப்பினும் இந்த சமயத்தில் உடல் பாதுகாப்புக் கருதி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
அதேபோல் வீட்டில் கணவன் , மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்கள் எனில் வீட்ற்கு வந்ததும் மீண்டும் ஒருமுறைக் குளித்துவிடுவது நல்லது. வீட்டையும் அலங்கோலமாக இல்லாமல் இந்த நேரத்தில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். கைகளை அடிக்கடிக் கழுவுங்கள், சானிட்டைஸர் பயன்படுத்துங்கள்.
காதலர்கள் சந்திப்புகளை தள்ளி வைப்பது நல்லது. பொதுவெளியில் சந்திப்பது மட்டுமன்றி அவ்வாறு சந்திக்கும்போது பாலின உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் தொலைதூரக் காதலர்களும் சந்திப்பை தவிர்ப்பது நல்லது. சந்திப்பிற்கு பதிலாக வீடியோ கால் மூலம் பேசலாம்.
அதேபோல் சிங்கில்ஸ் டேட்டிங் ஆப்ஸ் மூலம் புதிய நபர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துவிடுங்கள். வெளிநாடுகளிலும் உடலுறவுக் கொள்வதைக் காட்டிலும் சுய இன்பம் காணுதலே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். இதை நியூயார்க் போஸ்ட் , வாக்ஸ், ஹெல்த் போன்ற இதழ்களும் அறிவுறுத்துகின்றன. செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் அதற்கு முன் கைகளை கழுவி சானிடைஸர் தடவியபின் பயன்படுத்துங்கள். செக்ஸ் டாய்ஸுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றன.
ஆக, எதுவாக இருந்தாலும் உங்கள் தாம்பத்திய உறவை தள்ளி வைப்பது நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

No comments:
Post a Comment