Showing posts with label COVID 19. Show all posts
Showing posts with label COVID 19. Show all posts

Tuesday, March 24, 2020

21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன் - மோடி உரையின் சாராம்சம்

மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


  • யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
  • 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
  • இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
  • பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம்
  • இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம்
  • தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது
  • சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததா தான் சிரமப்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம்
  • கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும்
  • நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம்
  • இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
  • மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tuesday, March 17, 2020

கொரோனாவால் வீட்டில் அலுவலகப் பணி.. மனைவியுடன் காதலை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம்!

கொரோனா பாதிப்பால் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதிகளை அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊழியர்களின் நலன் கருதியும் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்நிலையில் என்னதான் அலுவலகப் பணி செய்தாலும் வீட்டில் இருக்கும் அன்பு மனைவியை சற்றும் கண்டுகொள்ளாமல் இருத்தல் நியாயமில்லை. அதேசமயம் மனைவியுடன் நேரம் ஒதுக்குவதற்கும் உங்கள் மனைவியுடன் காதலை வெளிப்படுத்த  இதுவே சரியான நேரம்.


கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீகள். உங்களுக்கும் வீட்டில் அலுவலகப் பணி என்றால் அவர்களுக்கும் இதுவே பொன்னான வாய்ப்பு..!

குறிப்பு : காதல் உணர்வுகளால் மட்டுமே பிணைப்போடு இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு உடல் ரீதியான பிணைப்பில் இணைந்துவிடாதீர்கள். அடிக்கடி இது கொரோனா காலம் என்பதை மறவாதீர்.

ரொமான்டிக் படங்கள் பாருங்கள். புத்தகப் பிரியர்கள் என்றால் நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று பட்டியலிட்ட காதல் புத்தகங்களைப் படியுங்கள். காதல் படங்கள் இருந்தால் இருவரும் இணைந்து பாருங்கள்.


 வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதால் வீட்ட்லேயே இணைந்து ஃபிரீ டைமில் இண்டோர் கேம் விளையாடுங்கள். அப்போது மகிழ்சியான , ஆரோக்கியமான போட்டிகளை வகுத்து அன்பால் ஒருவரையொருவர் வெல்லுங்கள்..

கொரோனா அச்சம் : காதலிக்கு முத்தம், தாம்பத்திய உறவு ஈடுபடலாமா..?

கூட்டமாக இருக்காதீர்கள், ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு பேசாதீர்கள், 6 அடி தள்ளியே பேசுங்கள், கை குலுக்காதீர்கள்...இப்படி மனிதனுக்கு மனிதனே எதிரி என்பது போல் ஆக்கிவிட்டது கொரோனா அச்சம்.


என்னதான் பாதுகாப்புகள் கருதி இதையெல்லாம் பின்பற்றினாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். இந்நிலையில் தன் காதல் மனைவியை, அன்புக் காதலனைக் கட்டியனைத்து முத்தம் கொடுத்தால் கூட தவறா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்

கொரோனா வைரஸே தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறி தெரிய  குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் உங்கள் அன்புத் துணைக்கும் இருந்தால் ..?

கொரோனா வைரஸ் உடலுறவு கொள்வதால் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கருத்தரித்தலும் பாதுகாப்பனதா என்பதும் உறுதியளிக்கவில்லை. இருப்பினும் கொரோனா தொடுதல், இருமல் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்து உங்களுடைய பாலுணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

எச்சில் துப்புதலும் தவறே என்று கூறிவரும் நிலையில் உதட்டோடு உதடு முத்தம் தருதலும் ஆபத்துதான். அதற்காக இந்த வைரஸ் தொண்டை வழியாகப் பரவுதல் என்பது அர்த்தமல்ல. எந்த விஷயம் உங்களை அடிக்கடி பாலியல் உணர்ச்சிகளுக்குத் தூண்டுகிறதோ அதில் கவனம் மிக மிக அவசியம். அதேபோல் உடலுறவு மூலமாகவும் பரவுகிறது என்பதற்கும் எந்தவித ஆதாரங்களும் இதுவரை இல்லை. இருப்பினும் இந்த சமயத்தில் உடல் பாதுகாப்புக் கருதி   உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

அதேபோல் வீட்டில் கணவன் , மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்கள் எனில் வீட்ற்கு வந்ததும் மீண்டும் ஒருமுறைக் குளித்துவிடுவது நல்லது. வீட்டையும் அலங்கோலமாக இல்லாமல் இந்த நேரத்தில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். கைகளை அடிக்கடிக் கழுவுங்கள், சானிட்டைஸர் பயன்படுத்துங்கள்.

காதலர்கள் சந்திப்புகளை தள்ளி வைப்பது நல்லது. பொதுவெளியில் சந்திப்பது மட்டுமன்றி அவ்வாறு சந்திக்கும்போது பாலின உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் தொலைதூரக் காதலர்களும் சந்திப்பை தவிர்ப்பது நல்லது. சந்திப்பிற்கு பதிலாக வீடியோ கால் மூலம் பேசலாம்.

அதேபோல் சிங்கில்ஸ் டேட்டிங் ஆப்ஸ் மூலம் புதிய நபர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துவிடுங்கள். வெளிநாடுகளிலும் உடலுறவுக் கொள்வதைக் காட்டிலும் சுய இன்பம் காணுதலே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். இதை நியூயார்க் போஸ்ட் , வாக்ஸ், ஹெல்த் போன்ற இதழ்களும் அறிவுறுத்துகின்றன. செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் அதற்கு முன் கைகளை கழுவி சானிடைஸர் தடவியபின் பயன்படுத்துங்கள். செக்ஸ் டாய்ஸுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றன.
ஆக, எதுவாக இருந்தாலும் உங்கள் தாம்பத்திய உறவை தள்ளி வைப்பது நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

Popular Posts