சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் ஒருவர், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 102 வது வட்ட செயலாளராக உள்ள சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சத்யா என்கிற ஆட்டோ சத்யா..! என்பவர் தான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்..!
திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான ஆட்டோ சத்யா, அண்ணா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 27 ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஆட்டோவில் ஏற்றி அழைத்துச்சென்ற சத்யா, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சதுரச் செயலாளர் சத்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலில் விழுந்து விருப்பப்பட்டு காதலனுடன் சென்றாலும், மைனர் பெண் என்பதால் சம்பந்தப்பட்ட காதலன் மீது தான் போக்சோ வழக்கு பாயும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில் அரசியல் கட்சியின் வட்டச் செயலாளர் போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment