Wednesday, January 22, 2020

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது!

 பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீடு முன் திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார்.ராமர் உள்ளிட்ட இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார், என்று ரஜினி குறிப்பிட்டார். பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். இந்த நிலையில் பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்துக்கு உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. மொத்த 3 போலீஸ் நிலையங்களில் ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக அவரின் வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் 'பன்றி' என திட்டியவர்.. இன்று ரஜினி மேட்டரில் படு சைலன்ட்.. என்னாச்சு ராமதாஸுக்கு!? அதேபோல் இன்று ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து ரஜினிக்கு எதிராக போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ரஜினிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பப்பட்டது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பலர் இன்று கைது செய்யப்பட்டனர். தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 40க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Posts