Wednesday, January 29, 2020

"அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி முறைகேடுக்கு கிளார்க்தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டு விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்வதை போல உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சருக்கு வேண்டிய உதவி ஆய்வாளர் ஒருவர், குடும்பத்தினர்களை தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படுவதாகவும், 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 22 ஆயிரத்து 250 பேர் குரூப்-4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வான நிலையில், எத்தகைய "வெளிப்படைத்தன்மை" கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். குரூப்-4 முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு,  துறை அமைச்சர் ஜெயக்குமாரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ள ஸ்டாலின், விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Popular Posts