கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில், தான் டைவ் அடித்திருந்தால் ரன் அவுட்டிலிருந்து தப்பியிருந்திருக்கலாம் என தற்போது கருதுவதாக இந்திய அணி வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர் அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவையாக இருந்தன. அப்போது 49ஆவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்த தோனி, ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் தோற்ற இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
இந்நிலையில் அந்தப் போட்டி குறித்து தற்போது மனம் திறந்துள்ள தோனி, எல்லைக்கோட்டை நெருங்கியபோது, தான் டைவ் அடித்து ரன் ஓடியிருக்கவேண்டும் என தெரிவித்தார். டைவ் அடிக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துவதாகவும் தோனி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment