ஹனிமூனுக்கு எங்க கூட வந்த என் அம்மா, கடைசியில் என் கணவரையே அபகரித்துவிட்டார்.. என்று குமுறியுள்ளார் இளம் பெண் ஒருவர். ஆம்.. மருமகனையே தனது கணவராக்கியுள்ளார் மாமியார் ஒருவர். இந்த தம்பதிக்கு இப்போது குழந்தையும் இருக்கிறதாம்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இளம் பெண் இதை தற்போது மீடியாக்களில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு, லண்டனை சேர்ந்தவர் லாரன் வால். 34 வயது பெண். இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், ஏர்போர்ட் ஊழியராக பணியாற்றியவர். லாரனுக்கு தாய் மட்டும்தான், தந்தை இல்லை.விமரிசையான திருமணம்லாரன்-பால் ஒயிட் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி வைத்து சந்தோஷப்பட்டுள்ளார், லாரனின் தாய் ஜூலி. £15,000 செலவு செய்து, இந்த திருமணத்தை நடத்தினாராம். இதன்பிறகு லாரன் வால் மற்றும் பால் ஒயிட் ஹனிமூனுக்கு தேவோன் பகுதிக்கு கிளம்பியுள்ளனர். அதும் ஒரு நாள், இரு நாளல்ல, 2 வாரங்கள் நீண்ட ஹனிமூன் அது. இத்தனை நாள் தனது தாயை பிரிந்து இருந்ததில்லையாம் லாரன். மேலும தந்தை இல்லாமல் தாய் வீட்டில் தனியாகத்தானே இருப்பார், அதனால் தன்னுடனே ஹனிமூனுக்கு கூட்டுச் செல்லலாம் என லாரன் நினைத்துள்ளார்.ஹனிமூனுக்கு துணைஇதுபற்றி ஜூலியிடமும் சொல்லியுள்ளார். "சின்னஞ்சிருசுங்க.. சந்தோஷமா இருங்க.. நான் எதற்கு நடுவுல.." என முதலில் மறுத்துள்ளார் ஜூலி. ஆனால், லாரன் மற்றும் பால் இருவரும் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியின்றி, மகளின் ஹனிமூனுக்கு துணைக்கு போயுள்ளார் ஜூலி. இங்குதான் ஆரம்பித்தது வினையே.மாமியாருடன் ஹனிமூன்ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். இதைப்பார்த்த லாரனுக்கு மகிழ்ச்சி. பரவாயில்லை, நமது அம்மாவுடன் பிரண்ட்லியாக கணவர் பழகுகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஹனிமூன் சென்று திரும்பிய பிறகுதான் லாரன் தலையில் ஒரு வெடிகுண்டு செய்தி வந்து விடிந்துள்ளது.செல்போனில் ஆபாசம்லாரனின் சகோதரி ஒருவர், தனது தாய் செல்போனை எடுத்து யதேர்ச்சையாக பார்த்தபோது, பால் மற்றும் ஜூலி நடுவேயான ஆபாச உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஆபாச விஷயங்களை பேசி இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை பார்த்து லாரன் சகோதரிக்கு தலை சுற்றிப்போனது. உடனே இதுபற்றி லாரனிடம் சொல்ல, அவரும் கிறுகிறுத்துப் போயுள்ளார். லாரனுக்கும பாலுக்கும் 2004 மார்ச் மாதம், பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் இவர்கள் திருமணம் செய்தனர். அந்த பெண் குழந்தைக்கு, 7 மாதங்கள்தான் ஆன நிலையில், திடீரென பால் தனது திருமண மோதிரத்தை கழற்றிவிட்டு, ஜூலி வீட்டுக்கே போய் குடியேறிவிட்டாராம்.மாமியார் பெற்ற குழந்தைஎல்லாவற்றுக்கும் உச்சமாக, ஜூலி அடுத்த 9வது மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம்.. மருமகன் பால்தான் அந்த குழந்தையின் தந்தை. தான் உயிருக்கு உயிராக நம்பிய இரு உறவுகளும் சேர்ந்து கொண்டு, தனக்கு துரோகம் இழைத்ததை நினைத்து இப்போதும் வருந்துகிறார், லாரன். தன்னை திருமணம் செய்து கொண்ட 5 வருடங்கள் கழித்து தனது தாயை தனது கணவர் கல்யாணம் செய்துகொண்டார் என்று சொல்லும்போது லாரன் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.திருமணம்எனக்கே போன் செய்து, தனக்கு கல்யாணம், வந்துவிடு என எனது தாய் சொன்னார். எனக்கும் பாலுக்கும் 2004, ஆகஸ்ட் 14ல் திருமணமானது. 2009, ஆகஸ்ட் 15ம் தேதி, எனது மாஜி கணவருக்கும், எனது தாய்க்கும் கல்யாணம் ஆனது. எனது மகளின் எதிர்காலத்திற்காக, நானும் அந்த திருமணத்திற்கு சென்று கலந்து கொண்டேன் என கலங்கியபடி கூறியுள்ளார் லாரன்.கொடுமைதான்நான் தப்பு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று எனது தாய் என்னிடம் சில முறை சொல்லியுள்ளார். நான் ஏற்கவில்லை. ஆனால் பால் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என ஆதங்கத்தோடு சொல்லும் லாரன், இப்போது தனது வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரை நாடியுள்ளார். இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது என்றாலும், துரோகங்களை மறக்க முடியவில்லை என்கிறார் லாரன். பாலுக்கு தற்போது 35 வயது. அவரது முன்னாள் மாமியாரும், தற்போதைய மனைவியுமான, ஜூலிக்கு இப்போது 53 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Actress Nivedhithaa Sathish latest photo shoot collection
-
Draupathi Day 5 Collection: Richard Rishi’s Tamil Film Makes a Mark At Box Office Richard Rishi and Sheela Rajkumar starrer controversial...
-
#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி...
-
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பத...
-
நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி! தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு...
-
தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் த...
-
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு! - பிரதமர் மோடி #CoronaVirus | #COVID19 | #Coronaviru...
-
Birbal : Film Review – A Legal Thriller That Keeps You Hooked Verdict: M.G. Srinivas gets it all right with an interesting plot, unique nar...
No comments:
Post a Comment