Friday, January 31, 2020

மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கதாநாயகி அல்ல, கதைகளின் நாயகி, ஹீரோக்களின் நாயகி அல்ல, இயக்குநர்களின் நாயகி என பெயரெடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளை அள்ளினார்.

 

தொடர்ந்து, "தர்மதுரை", "கனா" உள்ளிட்ட பல படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி களமாட தயாராகி விட்டார் என்று கூறுகிறார்கள்.



அதனை நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் மேலாடையை கழட்டி விட்டுபடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

மகளுடன் கவர்ச்சி ஆட்டம் - நடிகை சுரேகாவாணி வெளியிட்ட வீடியோ

ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். 

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, "அலா வைகுந்தபுரம்லூ" படத்தில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

அதில், தனது மகளுக்கு இணையாக கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுகிறார் நடிகை சுரேகாவாணி. இதனை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

காதலன் பிறந்தநாளுக்கு கிளுகிளு பரிசு கொடுத்த நடிகை - விபரீதமான முடிவு - வைரலாகும் வீடியோ

கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இலங்கையை சேர்ந்த அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். 

அதில்,இலங்கையை சேர்ந்த இளம் நடிகையும் கலந்து கொண்டார். இவர் அசானின் காதலி ஆவார். இதைத்தொடர்ந்து, அசானின் பிறந்த நாளுக்கு வந்த காதலி தனது காதலனுக்கு போன் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அந்த போனில் காதலனுக்கு சர்ப்ரைஸ் என்ற பெயரில், அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்சியை பதிவு செய்து கொடுத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்கும் போது காதலனுக்கே தெரியாமல் அதனை வீடியோவாக எடுத்து அதனை அவருக்கே பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த காதலன் அதிர்ச்சியானார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அதன்பின், அசான் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். தற்போது, இவர்களை வைத்து தான், சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

வீடியோ வெளியான அவமானம் தாங்க முடியாமல் அந்த நடிகை தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு திரும்ப வந்து விட்டார். மேலும் அந்த நடிகை வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்னைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வீடியோவை வைத்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் தன் வினை தன்னை சுடும் என்ற உவமைக்கு எடுத்துக்காட்டாக அந்த நடிகையின் விளையாட்டு மாறிவிட்டது என கிண்டலடித்து வருகிறார்கள்.

காதல், கசமுசா எல்லாம் சகஜம் தான். ஆனால், அதனை வீடியோ எடுப்பது எதற்காக..? தனிமையில் இருக்கும் போது அந்த நேரத்தை இனிமையாக அனுபவிக்காமல் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து யாருக்கு என்ன லாபம். ஒரு வேளை நம்மை விரும்பாதவர் கையில் கிடைத்து விட்டால் நமக்கு தானே பிரச்சனை. இதனை, காதலிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.



Thursday, January 30, 2020

பேண்ட் போடாமல் தொடையை காட்டி "என்னை அழைக்க முடியுமா?" தவித்த நடிகை

"என்னை அழைக்க முடியுமா?" - பேண்ட் போடாமல் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள நம்ம வீட்டு பிள்ளை நடிகை..!


கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான "துப்பறிவாளன்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

 

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இவருடைய கிளாமர் அப்பில் என்றால் அவருடைய தொடையழகு தான்.



அதனைதெளிவாகபுரிந்து வைத்துள்ள அவர் தன்னுடைய தொடையழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.



தற்போது, தன்னுடைய ஒரு பக்க தொடை மட்டும் தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து "என்னை அழைக்க முடியுமா..?" என்று கேட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள இணையத்தில் வைரலாகி வருகின்றன

பிறந்த குழந்தைக்கு மூன்று பேர் அப்பா வா ? அதிர்ச்சி ரிப்போர்ட்

கொல்கத்தா-வை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில்சேர்க்கப்ட்டார். நான் தான் கணவன் என ஒருவர் கையொப்பம் இட்டு பிரசவ வார்டில் அனுமதித்துள்ளார். தொடர்ந்து, அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

ஆனால், பிறந்த பெண் குழந்தைக்கு நான் தான் அப்பா என மூன்று பேர் வந்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்து மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தாலும் அந்த குழந்தையை பெற்ற அந்த பெண் வாய் திறக்காமல் அமைதி காத்தது அதை விட அதிர்ச்சியாக இருந்தது.

 


அந்த பெண்ணின் பெயர் சப்னா மைத்ரா. கடந்த 21-ம் தேதி சனிக்கிழமையன்று மருத்துவமனையில் கணவர் தீபன்கர்பால் அனுமதித்தார். ஞாயிறன்று அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.


மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் தான் சப்னாவின் கணவர் என்றும் பிறந்த குழந்தைக்கு அப்பா என்றும் கூறினார். ஆனால் செவிலியர்களுக்கு சந்தேகம் இருந்தது எனவே குழந்தை பிறந்த அறைக்குள் அந்த நபரை விடவில்லை.


செக்யூரிட்டியை கூப்பிட்டு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று கூறி விட்டு சென்றார் செவிலியர். அடுத்த சில மணிநேரங்களுக்குள் மற்றொருவர் எங்கே என் மனைவி குழந்தை என்று கேட்டுக்கொண்டு வந்தார் தனது பெயர் பிரதீப் ராய் என்று கூறிய அந்த நபர் தான் தான் சப்னாவின் கணவர் என்றும் குழந்தைக்கு அப்பா என்றும் கூறினார்.

ஏற்கனவே சப்னாவின் கணவர் தீபன்கர்பால் இருக்கும் போது ஹர்ஷா கேத்ரி மற்றும் பிரதீப் ராய் ஆகியோரும் அப்பா என்று சொந்தம் கொண்டாடி வந்தது ஏன் என்று குழம்பிப்போன மருத்துவமனை நிர்வாகத்தினர் நடாஜிநகர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாறி மாறி விசாரித்தும் ஆண்கள் மூவரும் தாங்கள்தான் குழந்தைக்கு அப்பா என்று கூறினர். இந்த சம்பவத்தை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்த அந்த குழந்தையின் அம்மாவோ எதைப்பற்றியும் மூச்சு விடாமல் தொடர்ந்து அமைதியாக இருந்து வந்தார்.

விசாரணையில், இரண்டாவதாக வந்த ஹர்ஷா கேத்ரி தான் குழந்தையின் அப்பா என தெரிய வந்தது. காரணம், அவர் தான்அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதற்கான சான்றிதழை கொடுத்தார். முதலில் வந்த நபர் எந்த ஆவணத்தையும் கொடுக்க வில்லை. மூன்றவாதாக வந்த நபர், நான் அந்த பெண்ணின் கணவன் இல்லை நண்பன் என்று கூறினார்.

கொடும காலம் டா சாமி..!

Wednesday, January 29, 2020

"அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி முறைகேடுக்கு கிளார்க்தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டு விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்வதை போல உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சருக்கு வேண்டிய உதவி ஆய்வாளர் ஒருவர், குடும்பத்தினர்களை தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படுவதாகவும், 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 22 ஆயிரத்து 250 பேர் குரூப்-4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வான நிலையில், எத்தகைய "வெளிப்படைத்தன்மை" கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். குரூப்-4 முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு,  துறை அமைச்சர் ஜெயக்குமாரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ள ஸ்டாலின், விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். 

2 ஆம் வகுப்பு மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பாமக வட்ட செயலாளர்

சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் ஒருவர், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் 102 வது வட்ட செயலாளராக உள்ள சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சத்யா என்கிற ஆட்டோ சத்யா..! என்பவர் தான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்..!

திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான ஆட்டோ சத்யா, அண்ணா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 27 ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஆட்டோவில் ஏற்றி அழைத்துச்சென்ற சத்யா, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சதுரச் செயலாளர் சத்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலில் விழுந்து விருப்பப்பட்டு காதலனுடன் சென்றாலும், மைனர் பெண் என்பதால் சம்பந்தப்பட்ட காதலன் மீது தான் போக்சோ வழக்கு பாயும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில் அரசியல் கட்சியின் வட்டச் செயலாளர் போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, January 22, 2020

மீண்டும் நடிகை கஸ்தூரி அஜித் ரசிகர்கள் மொதல் Ajith fans and Actress Kasturi again clashed in Twitter

#AjithFans #Kasthuri #dirtyajithfans கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு இழுத்த அஜித் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர் என்ற போர்வையில் போலி ஐடி கொண்ட ஒருவர் செய்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வம்புக்கு இழுத்தால் சரியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்க்கு பதிலடி கொடுத்த #கஸ்தூரி, ‘‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


அட லூசு பசங்களா! ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு பதிலடி! Kushboo support Rajinikanth in periyar issue

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை ஐந்து நிமிடம் அளித்த செய்தியாளர்கள் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்து ஊடகங்களிலும் அவர் கொடுத்த பேட்டி தான் தலைப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து கருத்து கூறிய நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, ‘ரஜினி கூறுவது சரியோ தவறோ அவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். பயம் இல்லாமல் தனது நிலையில் உறுதியாக இருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள் என்று கூறியிருந்தார்
இதற்கு ஒரு சமூக வலைதள பயனாளி ’ரஜினியுடன் நீங்கள் நடிப்பதால் அவர் தவறாக சொல்வதை சரி என்று கூறுகின்றீர்கள். ஒருவர் சொல்வது தவறு என்று தெரிந்தும் அவருடன் நடிப்பதால் நீங்கள் அவருக்கு ஆதரவாக பேசுவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்


இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை குஷ்பு ’அட லூசு பசங்களா, ரஜினி சார் கூட 28 வருசத்துக்கு முன்னரே ஏற்கனவே நடிச்சு முடிச்சிட்டேன். எனக்கு இது புதுசா இல்ல. ஏன்டா முட்டாள்ன்னு உறுதி செய்றீங்க’என்று பதிலளித்திருந்தார் குஷ்புவின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Kushboo comment about Rajinikanth interview

தமிழ் movie news, தமிழ் cinema stills, தமிழ் movie reviews, தமிழ் cinema reviews, தமிழ் movie reviews, தமிழ் actress stills, தமிழ் cinema wallpapers, தமிழ் movie HQ photos, தமிழ் actress hot stills, tollywood, தமிழ் movies updates, தமிழ் movie trailers



#Rajinikanth #Kushboo

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது!

 பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீடு முன் திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார்.ராமர் உள்ளிட்ட இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார், என்று ரஜினி குறிப்பிட்டார். பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். இந்த நிலையில் பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்துக்கு உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. மொத்த 3 போலீஸ் நிலையங்களில் ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக அவரின் வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் 'பன்றி' என திட்டியவர்.. இன்று ரஜினி மேட்டரில் படு சைலன்ட்.. என்னாச்சு ராமதாஸுக்கு!? அதேபோல் இன்று ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து ரஜினிக்கு எதிராக போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ரஜினிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பப்பட்டது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பலர் இன்று கைது செய்யப்பட்டனர். தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 40க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.

உன் புருஷன்கூட எனக்கு கல்யாணம்.. மகளுக்கு போன் போட்டு சொன்ன அம்மா.. குழந்தையும் பெத்தாச்சு

ஹனிமூனுக்கு எங்க கூட வந்த என் அம்மா, கடைசியில் என் கணவரையே அபகரித்துவிட்டார்.. என்று குமுறியுள்ளார் இளம் பெண் ஒருவர். ஆம்.. மருமகனையே தனது கணவராக்கியுள்ளார் மாமியார் ஒருவர். இந்த தம்பதிக்கு இப்போது குழந்தையும் இருக்கிறதாம்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இளம் பெண் இதை தற்போது மீடியாக்களில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு, லண்டனை சேர்ந்தவர் லாரன் வால். 34 வயது பெண். இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், ஏர்போர்ட் ஊழியராக பணியாற்றியவர். லாரனுக்கு தாய் மட்டும்தான், தந்தை இல்லை.விமரிசையான திருமணம்லாரன்-பால் ஒயிட் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி வைத்து சந்தோஷப்பட்டுள்ளார், லாரனின் தாய் ஜூலி. £15,000 செலவு செய்து, இந்த திருமணத்தை நடத்தினாராம். இதன்பிறகு லாரன் வால் மற்றும் பால் ஒயிட் ஹனிமூனுக்கு தேவோன் பகுதிக்கு கிளம்பியுள்ளனர். அதும் ஒரு நாள், இரு நாளல்ல, 2 வாரங்கள் நீண்ட ஹனிமூன் அது. இத்தனை நாள் தனது தாயை பிரிந்து இருந்ததில்லையாம் லாரன். மேலும தந்தை இல்லாமல் தாய் வீட்டில் தனியாகத்தானே இருப்பார், அதனால் தன்னுடனே ஹனிமூனுக்கு கூட்டுச் செல்லலாம் என லாரன் நினைத்துள்ளார்.ஹனிமூனுக்கு துணைஇதுபற்றி ஜூலியிடமும் சொல்லியுள்ளார். "சின்னஞ்சிருசுங்க.. சந்தோஷமா இருங்க.. நான் எதற்கு நடுவுல.." என முதலில் மறுத்துள்ளார் ஜூலி. ஆனால், லாரன் மற்றும் பால் இருவரும் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியின்றி, மகளின் ஹனிமூனுக்கு துணைக்கு போயுள்ளார் ஜூலி. இங்குதான் ஆரம்பித்தது வினையே.மாமியாருடன் ஹனிமூன்ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். இதைப்பார்த்த லாரனுக்கு மகிழ்ச்சி. பரவாயில்லை, நமது அம்மாவுடன் பிரண்ட்லியாக கணவர் பழகுகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஹனிமூன் சென்று திரும்பிய பிறகுதான் லாரன் தலையில் ஒரு வெடிகுண்டு செய்தி வந்து விடிந்துள்ளது.செல்போனில் ஆபாசம்லாரனின் சகோதரி ஒருவர், தனது தாய் செல்போனை எடுத்து யதேர்ச்சையாக பார்த்தபோது, பால் மற்றும் ஜூலி நடுவேயான ஆபாச உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஆபாச விஷயங்களை பேசி இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை பார்த்து லாரன் சகோதரிக்கு தலை சுற்றிப்போனது. உடனே இதுபற்றி லாரனிடம் சொல்ல, அவரும் கிறுகிறுத்துப் போயுள்ளார். லாரனுக்கும பாலுக்கும் 2004 மார்ச் மாதம், பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் இவர்கள் திருமணம் செய்தனர். அந்த பெண் குழந்தைக்கு, 7 மாதங்கள்தான் ஆன நிலையில், திடீரென பால் தனது திருமண மோதிரத்தை கழற்றிவிட்டு, ஜூலி வீட்டுக்கே போய் குடியேறிவிட்டாராம்.மாமியார் பெற்ற குழந்தைஎல்லாவற்றுக்கும் உச்சமாக, ஜூலி அடுத்த 9வது மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம்.. மருமகன் பால்தான் அந்த குழந்தையின் தந்தை. தான் உயிருக்கு உயிராக நம்பிய இரு உறவுகளும் சேர்ந்து கொண்டு, தனக்கு துரோகம் இழைத்ததை நினைத்து இப்போதும் வருந்துகிறார், லாரன். தன்னை திருமணம் செய்து கொண்ட 5 வருடங்கள் கழித்து தனது தாயை தனது கணவர் கல்யாணம் செய்துகொண்டார் என்று சொல்லும்போது லாரன் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.திருமணம்எனக்கே போன் செய்து, தனக்கு கல்யாணம், வந்துவிடு என எனது தாய் சொன்னார். எனக்கும் பாலுக்கும் 2004, ஆகஸ்ட் 14ல் திருமணமானது. 2009, ஆகஸ்ட் 15ம் தேதி, எனது மாஜி கணவருக்கும், எனது தாய்க்கும் கல்யாணம் ஆனது. எனது மகளின் எதிர்காலத்திற்காக, நானும் அந்த திருமணத்திற்கு சென்று கலந்து கொண்டேன் என கலங்கியபடி கூறியுள்ளார் லாரன்.கொடுமைதான்நான் தப்பு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று எனது தாய் என்னிடம் சில முறை சொல்லியுள்ளார். நான் ஏற்கவில்லை. ஆனால் பால் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என ஆதங்கத்தோடு சொல்லும் லாரன், இப்போது தனது வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரை நாடியுள்ளார். இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது என்றாலும், துரோகங்களை மறக்க முடியவில்லை என்கிறார் லாரன். பாலுக்கு தற்போது 35 வயது. அவரது முன்னாள் மாமியாரும், தற்போதைய மனைவியுமான, ஜூலிக்கு இப்போது 53 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 21, 2020

பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு

பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

 நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பெரியார் இயக்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது; என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது; வருத்தம் தெரிவிக்க முடியாது என கூறினார். இது பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் இப்பேச்சுக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, சபாஷ் என பாராட்டியுள்ளார்.

இதேபோல் பாஜக நிர்வாகி கே.டி ராகவன், ரஜினி சொன்னது முற்றிலும் உண்மைதான்.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்துள்ளார்.

Sunday, January 19, 2020

கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ரஜினியுடன் நடித்து வரும் ’தலைவர் 168’ உள்பட ஓரிரு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் ஆர்ச்சா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.





இந்த நிலையில்  இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பெங்குயின்’ உள்பட கீர்த்தி சுரேஷ் மேலும் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி மிஸ் செய்த அஜித் வெற்றிப்படம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தில் அஜித் நடித்த தகவலை பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்குவதாக இருந்த ஒரு திரைப்படம்தான் அஜித் நடித்த ’வரலாறு’ திரைப்படம் என கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதையை ஏற்கனவே ரஜினியிடம் அவர் கூறியபோது அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு அந்த படத்திற்கான டைட்டில் கூட தேர்வு செய்து விட்டதாகவும் அதன்பின்னர் ஜக்குபாய் படத்தின் பணிகள் தொடங்கி திடீரென அந்த படம் நின்றுவிட்டதாகவும் கூறினார்.


இந்த நிலையில் ரஜினிகாந்த் ’சந்திரமுகி’ படத்தில் நடிக்கவும் சென்று விட்டதால் ’வரலாறு’ படத்தின் கதையை அஜித்திடம் கூறியதாகவும் அஜித்துக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்து விட்டதால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் ரஜினியை கே.எஸ்.ரவிகுமார் பின்னர் ஒருநாள் சந்தித்த போது ’வரலாறு’ படத்தில் நான் நடிப்பதாக கூறி இருந்தேனே ஏன் எனக்கு இந்த படத்தை தரவில்லை என ரஜினி கேட்டதாகவும், உண்மையில் அந்த படம் ரஜினிகாந்த் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் கேஎஸ் ரவிக்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தின் மிகப்பெரிய ஹிட் படம் ஒன்று ரஜினி மிஸ் செய்த படம் என்பது இந்த பேட்டியின் மூலம் தெரிய வருகிறது.

Sunday, January 12, 2020

திசையன்விளை தீயணைப்பு நிலையம் புதிய கட்டிடம் முதல்வர் திறப்பு

திசையன்விளை தீயணைப்பு நிலையம் புதிய கட்டிடம் முதல்வர் திறப்பு
திசையன்விளை, ஜன, 7
திசையன்விளை தீயணைப்பு நிலையம் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர்
காணெளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திசையன்விளையில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்க்கு ராதாபுரம்
எம்.எல்.ஏ இன்பதுரை முயற்சியால், தமிழக அரசின் சார்பில் ருபாய் சுமார் 1
கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொளி
காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திசையன்விளையில்
நடந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் நகர ஜெ.,
பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கில் பழனிசங்கர், தொடக்க
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலன், இயக்குனர் கண்ணன்,
நகர செயலாளர் சுடலைமணி, ஜெயபால், ரூபன், ராஜா, பால்ராஜ், செந்தில்,
அல்அமீன், சுந்தரம், தியாக அரசு, ரஞ்சித்சிங் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

2019 உலகக்கோப்பையில் ரன் அவுட் ஆனது குறித்து மனம் திறந்த தோனி

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில், தான் டைவ் அடித்திருந்தால் ரன் அவுட்டிலிருந்து தப்பியிருந்திருக்கலாம் என தற்போது கருதுவதாக இந்திய அணி வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர் அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவையாக இருந்தன. அப்போது 49ஆவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்த தோனி, ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் தோற்ற இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

இந்நிலையில் அந்தப் போட்டி குறித்து தற்போது மனம் திறந்துள்ள தோனி, எல்லைக்கோட்டை நெருங்கியபோது, தான் டைவ் அடித்து ரன் ஓடியிருக்கவேண்டும் என தெரிவித்தார். டைவ் அடிக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துவதாகவும் தோனி குறிப்பிட்டார். 

Saturday, January 4, 2020

6 மாதங்களாக முதலிரவு நடக்காமல் ஏங்கிய மனைவி...!

திருமணமாகி பல மாதங்களாக முதலிரவு நடக்காத நிலையில், முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர், கட்டையாபுரம், ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31) கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது திருமண சீர் வரிசையாக நகைகள், பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், திருமண நடந்த நாள் முதல் இன்று வரை முதலிரவு நடக்கவில்லை.



இது தொடர்பாக மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் முறையிட்ட போது மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, உனக்கும், சரவணனுக்கும் முதலிரவு நடக்காது என பானுவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பானு கதறியபடி தனது பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார்.

பெண் வீட்டார் இதுதொடர்பாக மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் திமிராக ஆண்டுக்கணக்கில் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார். அதற்கு என்ன அவசரம் என்றனர். மேலும், கணவர் சரவணன், மனைவியிடம், எனது தந்தை மூக்காண்டிக்காகத்தான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். வேண்டுமென்றால் அவருடன் உல்லாசமாக இருந்துகொள். என்னை தொந்தரவு செய்யக்கூடாது என ஆணவத்தின் உச்சத்தில் அசிங்கமாக பேசியுள்ளார். இதனையடுத்து கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.


உடனே இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பானு புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் கணவர் சரவணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டணிகளை தவிர்த்து பார்த்தால் 3-வது பெரிய கட்சி தினகரன் அமமுக தான்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல், பொது சின்னமும் இல்லாமல் 95 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று அமமுகவை டிடிவி.தினகரன் உயிர்த்தெழ செய்துள்ளார். கூட்டணிகளை தவிர்த்து பார்த்தால் 3-வது பெரிய அணியாக உருவெடுத்து அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் அசத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி நேற்று முடிக்கப்பட்டு முடிவு வெளியாகின. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக - அதிமுக கூட்டணிகள் மாறி மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி 240 இடங்களையும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணி 271 இடங்களை பிடித்து அசத்தியது. இதேபோல ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2,199 இடங்களையும், திமுக கூட்டணி 2,356 இடங்களையும், அமமுக கட்சி 95 இடங்களிலும் வெற்றி பெற்றது.



இந்நிலையில், அமமுக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 5 சதவீத வாக்குகள் வாங்கிய நிலையில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, போர்ப்படை தளபதி தங்கத்தமிழ்செல்வன் பெரும்படையுடன் திமுகவில் சேர்த்துவிட்டார். இசைக்கி சுப்பையா மாவட்டங்களை துடைத்துக்கொண்டு அதிமுகவில் இணைந்துவிட்டார். பிரச்சார பீரங்கி புகழேந்தி பெரும்படையை திரட்டிக்கொண்டுபோய் அதிமுக ஐக்கியமாகிக்கொண்டார். கணக்குப்படி பார்த்தால் தினகரன் உள்ளாட்சி தேர்தலில் 0.75 சதவீத ஓட்டு தான் வாங்குவார் என்று அதிமுக நிர்வாகிகள் ஏலணமாக பேசினர்.


இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அமமுகவை கட்சியாக பதிவு செய்த போதும் மாநில தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டார். அதேபோல், அதிமுக, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அமமுக கூட்டணி இல்லாமல் தனித்து நின்றது. தனித்து நின்று போட்டியிட்ட அமமுக 95 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1216 இடங்களில் 2-வது இடமும், 1000க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக, அதிமுக வெற்றி, தோல்வியை நிர்ணயித்துள்ளது. கூட்டணிகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 15 சதவீத ஓட்டு வங்கியை பெற்று 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அமமுக பெற்றுள்ளது.

கூட்டணியோடு பார்த்தால், இந்த அந்தஸ்து பாமகவுக்கு கிடைக்கும். மேலும், அமமுக கயத்தாறு, கண்ணங்குடி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய அசத்தியுள்ளது. அமமுக இந்த வளர்ச்சியை கண்டு ஆளும் அதிமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

Bigg Boss Tamil 3 famous Losliya Mariyanesan latest photoshoot

Cute nd Pretty
@Losliyamaria96






#LosliyaMariyanesan #Losliya

Popular Posts