கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாராட்டும் வகையில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமது டிவிட்டர் பதிவில், அரசோடு சேர்ந்து மக்களும் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021-ம் ஆண்டு தேர்தலுக்கு தமிழக அரசியல் தயாராகி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக 2021-ம் ஆண்டு தேர்தலில் எதிர்பார்க்கப்படும் அரசியல் வருகையாக இருக்கிறார் ரஜினி. இன்னும் கட்சி தொடங்கப்படவில்லை என்றாலும் சமீபத்திய அரசியல் செய்திகளில் ரஜினியின் பெயர் அடிக்கடி வந்து போகிறது. அவ்வப்போது மக்கள் மன்றத்தினரையும் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் சென்னையில், ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.
அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உண்மையல்ல என நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. அக்கூட்டத்தின் முடிவில், ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றமென ரஜினி கருத்து கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், கட்சி தொடங்கி எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், தான் முதலமைச்சராக பதவி ஏற்கப்போவதில்லை என்றும், கட்சியின் தலைமைப் பொறுப்பை மட்டுமே வகிக்கப்போவதாகவும் ரஜினி கூறியதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்கப்போகிறார்? கமல், பாஜக என பல திசைகள் இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்போகும் திசை எது? அல்லது தனித்திசையில் பயணிக்கப்போகிறாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை மீண்டும் சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் நாளை காலை எட்டு மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கும் ரஜினி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சித் தொடங்கப்போகும் நாள், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று சொல்கிறார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இறங்கியிருக்க வேணடும்.
சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தற்போது காலம் கடந்து விட்டது 69வது வயதில் அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவர் அரசியலுக்கு வருவதைப் பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.
ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார்.
ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.
ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது. வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்த நிலையில் தற்போதைய நகர்வுகள் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை ஐந்து நிமிடம் அளித்த செய்தியாளர்கள் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்து ஊடகங்களிலும் அவர் கொடுத்த பேட்டி தான் தலைப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து கருத்து கூறிய நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, ‘ரஜினி கூறுவது சரியோ தவறோ அவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். பயம் இல்லாமல் தனது நிலையில் உறுதியாக இருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள் என்று கூறியிருந்தார்
இதற்கு ஒரு சமூக வலைதள பயனாளி ’ரஜினியுடன் நீங்கள் நடிப்பதால் அவர் தவறாக சொல்வதை சரி என்று கூறுகின்றீர்கள். ஒருவர் சொல்வது தவறு என்று தெரிந்தும் அவருடன் நடிப்பதால் நீங்கள் அவருக்கு ஆதரவாக பேசுவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை குஷ்பு ’அட லூசு பசங்களா, ரஜினி சார் கூட 28 வருசத்துக்கு முன்னரே ஏற்கனவே நடிச்சு முடிச்சிட்டேன். எனக்கு இது புதுசா இல்ல. ஏன்டா முட்டாள்ன்னு உறுதி செய்றீங்க’என்று பதிலளித்திருந்தார் குஷ்புவின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Kushboo comment about Rajinikanth interview
தமிழ் movie news, தமிழ் cinema stills, தமிழ் movie reviews, தமிழ் cinema reviews, தமிழ் movie reviews, தமிழ் actress stills, தமிழ் cinema wallpapers, தமிழ் movie HQ photos, தமிழ் actress hot stills, tollywood, தமிழ் movies updates, தமிழ் movie trailers
பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு
பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பெரியார் இயக்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது; என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது; வருத்தம் தெரிவிக்க முடியாது என கூறினார். இது பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் இப்பேச்சுக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, சபாஷ் என பாராட்டியுள்ளார்.
இதேபோல் பாஜக நிர்வாகி கே.டி ராகவன், ரஜினி சொன்னது முற்றிலும் உண்மைதான்.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தில் அஜித் நடித்த தகவலை பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்குவதாக இருந்த ஒரு திரைப்படம்தான் அஜித் நடித்த ’வரலாறு’ திரைப்படம் என கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதையை ஏற்கனவே ரஜினியிடம் அவர் கூறியபோது அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு அந்த படத்திற்கான டைட்டில் கூட தேர்வு செய்து விட்டதாகவும் அதன்பின்னர் ஜக்குபாய் படத்தின் பணிகள் தொடங்கி திடீரென அந்த படம் நின்றுவிட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ’சந்திரமுகி’ படத்தில் நடிக்கவும் சென்று விட்டதால் ’வரலாறு’ படத்தின் கதையை அஜித்திடம் கூறியதாகவும் அஜித்துக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்து விட்டதால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் ரஜினியை கே.எஸ்.ரவிகுமார் பின்னர் ஒருநாள் சந்தித்த போது ’வரலாறு’ படத்தில் நான் நடிப்பதாக கூறி இருந்தேனே ஏன் எனக்கு இந்த படத்தை தரவில்லை என ரஜினி கேட்டதாகவும், உண்மையில் அந்த படம் ரஜினிகாந்த் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் கேஎஸ் ரவிக்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித்தின் மிகப்பெரிய ஹிட் படம் ஒன்று ரஜினி மிஸ் செய்த படம் என்பது இந்த பேட்டியின் மூலம் தெரிய வருகிறது.