Showing posts with label Keerthi Suresh. Show all posts
Showing posts with label Keerthi Suresh. Show all posts

Sunday, January 19, 2020

கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ரஜினியுடன் நடித்து வரும் ’தலைவர் 168’ உள்பட ஓரிரு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் ஆர்ச்சா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.





இந்த நிலையில்  இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பெங்குயின்’ உள்பட கீர்த்தி சுரேஷ் மேலும் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular Posts