Saturday, March 7, 2020

துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய்?

டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண் ராஜா காமராஜா, சுதா கொங்கரா ஆகியோர் கதை சொல்லி உள்ளனர்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்படுகிறது. நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் தயாராகி வருவதாக தற்போது புதிய தகவல் பரவி வருகிறது.

விஜய் வெற்றி படங்கள் பட்டியலில் துப்பாக்கி முக்கிய படம். 2012-ல் இந்த படம் வந்தது. காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜமால் ஆகியோர் நடித்து இருந்தனர். விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுக்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். ஏ.ஆர்.முருகதாசிடமும் வற்புறுத்தினர்.

இதையடுத்து துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து விட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Friday, March 6, 2020

ரஜினிகாந்த் கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த்  தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.  



இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது.  வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.  பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்த நிலையில் தற்போதைய நகர்வுகள் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.  

Thursday, March 5, 2020

இந்தி தெரிந்திருந்தால், ஐஸ்வர்யாராயுடன் நடித்திருப்பேன்..!

திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த ராதாரவியிடம் விரைவில் பேசி முடிக்கும்படி துண்டு சீட்டு கொடுக்கப்பட்டதால் கோபமடைந்தார்.

சென்னை வடபழனியில் ராஜவம்சம் பட  இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, ஹிந்தி  தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும், ஹிந்தி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார். 


ராதாரவி பேசி கொண்டிருக்கையில் விரைவில் முடிக்கும்படி சீட்டு கொடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ராதாரவி, கெட்டவார்த்தையில் திட்டுவேன் என்று எச்சரித்தார். 

Wednesday, March 4, 2020

முதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது

பெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் குரூப் பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் முதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது

10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக மாற்றும் திட்டம் - பிரதமர் மோடி ஒப்புதல்


பொதுத்துறையைச் சேர்ந்த பத்து வங்கிகளை இணைக்கும் மெகா திட்டத்துக்கு, பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இதில் பொதுத்துறையைச் சேர்ந்த பத்து வங்கிகளை, நான்கு வங்கிகளாக இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி யுனைடெட் வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்டும். சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடனும் அலகாபாத் வங்கியை, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்ரேஷன் வங்கி யுனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பு நடைமுறை, ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். ஏர்- இந்தியா நிறுவனத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நூறு சதவீதம் வரை முதலீடு செய்யலாம் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதற்கு முன்பு 49 சதவீதம் மட்டுமே என்.ஆர்.ஐ.களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Draupathi Day 5 Collection

Draupathi Day 5 Collection: Richard Rishi’s Tamil Film Makes a Mark At Box Office

Richard Rishi and Sheela Rajkumar starrer controversial Tamil film Draupathi released last Friday. The film is unexpectedly making its mark at the box office.

On day 1, Draupathi earned Rs 2.71 crore in Tamil Nadu which includes Rs 0.13 crore from Chennai region. The film earned Rs 0.19 crore, Rs 0.23 crore and Rs 0.08 crore from Chennai region on Day 2, 3 and 4 respectively.

Now, the day 5 collections are out and its surprisingly good. As per the early buzz, Draupathi is expected to earn Rs 0.07 crore at the Chennai box office. At the end of day 5, Draupathi is expected to mint more than Rs 10 crore at the Tamil Nadu box office.


After being trapped into a lot of controversies, director Mohan G managed to release Draupathi which is based on a controversial subject. It's based on the 2013 fake marriage cartel that took place in Chennai. The music of this rural drama is composed by Jubin and cinematography has been done by Manoj Narayan.



Tuesday, March 3, 2020

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..!

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.


 இப்படத்தில் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா, பிரகாஷ் ராஜ், Ashish Vidyarthi, ஜானகி சபேஷ் உள்ளியிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் குறிப்பாக இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஜெனிபர்.

இவர் இப்படத்திற்கு முன்பு விஜய்யும் சூர்யாவின் இணைந்து நடித்திருந்த நேருக்கு நேர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் 2017ஆம் அணைந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருத்தன் என்று படத்தில் நடிகை பிரியா ஆனந்தின் தோழியாக நடித்திருந்தார்.

 இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெனிபர். இந்நிலையில் தற்போது இவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.






ஆம் அந்த அளவிற்கு கில்லி படத்தில் பார்த்தது போல் இல்லாமல் தெரிகிறார் ஜெனிபர். இதோ அந்த புகைப்படங்கள்..

Popular Posts