Friday, March 13, 2020

இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்.

புதிய சாதனை படைத்த அஜித் பாடல்

தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது. தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை வைத்து டிக்-டாக் செய்து வெளியிடும் தம்பதியினரும் இருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியாகி ஓராண்டைக் கடந்துவிட்டாலும், இப்போது 'விஸ்வாசம்' பாடல்கள் மற்றுமொரு சாதனையைப் புரிந்துள்ளது. ஆடியோ வடிவில் இந்தப் பாடல் 500 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது. வீடியோக்களை பார்வைகளாகக் கணக்கிடுவது போல், ஆடியோ கேட்பதை ஸ்ட்ரீமிங் என்று சொல்வார்கள். அந்த வகையில் 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் இதுவரை 50 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது.

அஜித்தை தவிர வேறு எந்த ஒரு நடிகருக்கும் அது கிடையாது, டாப் ஹீரோ அதிரடி பேட்டி

தல அஜித் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு தற்போது பல லட்சம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகர்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து பாலிவுட் முன்னணி நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 65% சதவீதம் வரை முடிந்துள்ளது என்று சில தகவல்கள் வெளியானது.

சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில வீடியோக்கள் மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.

தல அஜித் குமாரை பற்றி பலரும் நேர்காணல்களில் புகழ்ந்து பேசி அல்லது அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறியும் நாம் கேட்டிருப்போம்.

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான திரு வெங்கேடஷ் அண்மையில் அளித்த பேட்டியில் "நடிகர் அஜித்துடன் இருக்கும் அந்த ஒரு ஸ்வாக் வேறு எந்த ஒரு நடிகரிடமும் கிடையாது" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி?

கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதைக்கொண்டு இன்னும் 2 ஆண்டுகளுக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சத்தில் உள்ளன. குறிப்பாக சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-த்தை தாண்டியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி உள்ளது. இங்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை தற்போது வரை 76 நபர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாவும் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..!

இந்நிலையில் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தின் உயரதிகாரி ராமன் கங்காகேத்கர், கொரோனாவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது கொரோனா பாதித்தவர் உடலில் இருந்து 11 வைரஸ்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் கடின முயற்சிக்கு பின் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வைரஸ்களை கொண்டு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். இந்தியாவில் இதுவரை 52 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 57 ஆய்வகங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் வசதி இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, March 12, 2020

நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது

விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now?? 

Wednesday, March 11, 2020

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமனம்!

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் ஜேபி நட்டா உத்தரவை வழங்கினார்.


செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல் முருகன், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எல் படிப்பும் முடித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டம் தொடர்பான பிஎச்டி பட்டம் படித்து வருகிறார். இவர் 1977-ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பிறந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ரேஸில் இருந்தனர். அப்போது ரஜினிகாந்த் கூட அப்பதவிக்கு வரலாம் என சொல்லப்பட்டது. தமிழக பாஜகவின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்‌டம் சென்னையில் நடந்தது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவராக குப்புராமு நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்டது. இது போன்று பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் இன்று ஒருவழியாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்களுடன் நாளை மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 
சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று ரஜினி அறிவித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் அளித்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு வி‌ஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு வி‌ஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார்.

நிர்வாகிகளிடம் பேசிய ரஜினி சட்டசபை தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால் கண்டிப்பாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை என்று கூறியதாகவும், ஆனால் நிர்வாகிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்தி பரவியது. ரஜினியின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான வி‌ஷயங்களை பேச வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை தனக்கு சின்ன ஏமாற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். அந்த சின்ன ஏமாற்றம் எதுவென்று நாளை ரஜினிகாந்த் குறிப்பிடுவார் என்று கூறுகிறார்கள். நாளை ஆலோசனை கூட்டத்துக்கு பின் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருப்பதால் ரஜினி கட்சி தொடங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். கட்சி பதிவு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் இதற்காக ரஜினிக்கு நெருக்கமான வக்கீல்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் கடந்த வாரமே தகவல் வெளியானது.

வரும் ஏப்ரல் 14-ந்தேதி ரஜினி தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்த செய்திகளை உண்மையாக்கும் வகையில் ரஜினியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோரை நேரில் சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தினார்.

நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் சில ஆலோசனைகள் செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்வதுடன் கட்சி அறிவிப்பு தேதியையும் வெளியிடுவார் என்கிறார்கள்.

ரஜினி கடந்த வாரம் குறிப்பிட்ட அந்த ஏமாற்றம், அதிருப்தி என்ன? அந்த அதிருப்தி களையப்பட்டதா என்பதும் நாளை தெரியவரும். ரஜினி கட்சி அறிவிப்பையே மாநாடாக நடத்தி வெளியிட வேண்டும் என்பது அவர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கையாக எழுந்துள்ளது. இதை உணர்ந்த ரஜினி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அறிவிப்பை வெளியிடும்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்த ரஜினி தற்போது கூட்டணிக்கும் தயாராகி விட்டார். எனவே தனது செல்வாக்கை காட்ட மாநாடு நடத்துவது ஒன்றே சரியான வழியாக இருக்கும் என்று நினைக்கிறார்.

மாநாடு மூலம் தனது செல்வாக்கை காட்டினால் தான் கூட்டணி அமையும் போது அது தனது தலைமையில் அமையும் என்பது ரஜினியின் கணக்கு. ரஜினியுடன் கூட்டணி என்றால் அதில் சேர்வதற்கு கமல், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் முன்வரலாம். இந்த கட்சிகளில் ரஜினி தனது தலைமையை ஏற்கும் கட்சிகளை சேர்த்துக் கொள்வார்.

மேலும் தி.மு.க., அதிமுக கூட்டணிகளில் உள்ள அதிருப்தி கட்சிகள் ரஜினியுடன் இணைந்து வலுவான கூட்டணியாக மாறும் என்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Popular Posts