Tuesday, December 31, 2019

“கொலை செய்ய தூண்டும் பேச்சு” நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29-ந் தேதி பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதோடு, அவர்கள் இருவரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், நெல்லை கண்ணனுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னையில் ஆளுநர் மாளிகையிலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை கண்ணன் மீது இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முயல்வது, இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற , ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குவது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த குறிப்பிட்ட இரண்டு அரசியல் கட்சியினர், நெல்லை கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், உடல்நிலை சரியில்லை என்றால் அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி போலீசாரே அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினரை சமாதானம் செய்த போலீசார், ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். வண்ணார்பேட்டையிலுள்ள கேலக்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெல்லை கண்ணனை அங்கு சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

“விரைவாக முடிவடைந்த தனுஷ் படம்”

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இவற்றில் அசுரன் பெரிய வெற்றி பெற்றது. தனுஷ் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் முடிந்து பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வந்தார். ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். பிரேவ் ஹார்ட், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இந்த படத்துக்கு சுருளி என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.


இது தனுசுக்கு 40-வது படம். படப்பிடிப்பு சென்னையிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்தது. பழனியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

"கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. நான் நடித்த படங்களிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். விவேகமான திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு சிறப்பான படமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதான் ஹீரோயின்னு சொன்னார்.. பழகினேன்.. கள்ளகாதலால்.. நொறுங்கிட்டேன்..ஷாக் வாக்குமூலம்

"தேவி.. நீதான் என் ஹீரோயின்"ன்னு சொன்னார்.. அதனால நெருங்கி பழகினேன்.. ஆனா கடைசியில இப்படி ஆயிடுச்சு" என்று துணை நடிகை தேவி வாக்குமூலம் தந்துள்ளார். சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவிதான் தேவி.. சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.. நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கும் ரவி என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.. ரவியும் துணை நடிகர்தானாம்.. இந்த விஷயம் சங்கருக்கு தெரியவந்ததும், தேவியை கண்டித்தார். அதனால், தேவி, ரவியுடன் பழகுவதை நிறுத்திகொண்டார்.. இதனால் ரவி கடுப்பானார்... தேவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். 2 வருடங்களாக ரவியுடன் பேச்சுவார்த்தையும் இல்லை.. எனினும் தேவி வீட்டுக்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்தார். இதனால் போன் நம்பரையும் மாற்றிவிட்டார், வீட்டையும் மாற்றிவிட்டார் தேவி. இந்த நிலையில் கொளத்தூரில் உள்ள தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு ரவி குடிபோதையில் சென்று கதவை தட்டி தகராறு செய்துள்ளார். "தேவியின் அட்ரஸ் என்ன.." என்று கேட்டு லட்சுமியின் குழந்தையின் கழுத்தையும் பிடித்து நெரித்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தேவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். லட்சுமி வீட்டில் ரவி சென்று தகராறு செய்தவதை கேள்விப்பட்ட தேவி, கணவன் சங்கருடன் அங்கு சென்றார். தேவி, சங்கர், லட்சுமி, லட்சுமியின் கணவர் சவாரியா 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டையாலேயே சரமாரியாக அடித்தனர்.. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் போலீஸ் ஸ்டேஷனில் ரவியை கொன்றுவிட்டோம் என்று கூறி சரணடைந்தனர். இது சம்பந்தமாக தேவி தந்த வாக்குமூலம் இதுதான்: "நான் சினிமா, சீரியல்களில் நடித்து வருகிறேன். 8 வருஷத்துக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கின்போதுதான் ரவியை எனக்கு தெரியும்.. அவரும் துணை நடிகர்தான்.. அடிக்கடி என் வீட்டிற்கு என்னை சந்திக்க வருவார். ஒருநாள் திடீர்ன்னு "நான் படம் எடுக்க போறேன்.. டைரக்ட் செய்யலாம்னு இருக்கேன்.. உன்னை ஹீரோயின் ஆக்கிடறேன்" என்று ரவி சொன்னார்.. அதை நம்பிதான் நானும் அவருடன் பழகினேன். ஆனால், அவர் வீட்டுக்கு அடிக்கடி வரவும், குடும்பத்தில் பிரச்சனை வந்தது.. ஆனால் எங்களுக்குள் எந்த விரிசலும் வரவில்லை..இதுக்கு பிறகு அவருக்கு சான்ஸ் எதுவும் நடிக்க வரவில்லை.. அதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.. அடிக்கடி குடிச்சிட்டு வந்து தொல்லை தர ஆரம்பிச்சார்.. வேற வீட்டுக்கு மாறி போனதால், என் தங்கச்சி லட்சுமி வீட்டுக்கு போய் தகராறு செய்திருக்கிறார்.. என் தங்கச்சி மகள் கழுத்தை நெரித்ததால் ஆத்திரத்தில் நாங்கள், கட்டையால் அடித்து கொன்றோம்" என்று வாக்குமூலம் தந்தார்.

நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு

நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறத. குறிப்பாக ள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்.அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான் இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.இதையடுத்து பாஜகவினர் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டதோடு, நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, December 26, 2019

ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?

நரேந்திர மோதி - 'ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?' - சர்ச்சையில் இந்திய பிரதமர்





வியாழக்கிழமை) அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் காண முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புகைப்படம் ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தற்போது, அந்த புகைப்படம்தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.  

Wednesday, December 25, 2019

Ajith completes the Hyderabad schedule for Valmai

Thala Ajith is one of the star heroes in Kollywood movie industry. The star hero scored a hit in the form of Nerkonda Paarvai, which is the remake of Pink in Tamil. Soon after the film, the actor teamed up with the same director Vinoth for another exciting film Valmai. The makers began the shoot of the movie in Hyderabad sometime back and as per the Kollywood reports, Ajith completes the Hyderabad schedule and the makers are happy with the output. Ajith completes the Hyderabad schedule and now back to Chennai to spend some time with family before he joins the second schedule. Yami Gautam is almost confirmed to play Ajith's pair in the film. 


Boney Kapoor produces the movie and Yuvan Shankar Raja is the music director. The makers plan to release the movie for Diwali next year

கீர்த்தி சுரேஷுக்கு பூங்கொத்து கொடுத்த 'சூப்பர் ஸ்டார்'!

மறைந்த புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு வெளியான படம் 'மகாநடி'. இந்த படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,  கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த தேசிய விருது விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கைகளில் இருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார் கீர்த்தி சுரேஷ். விருதைப் பெற்றுக்கொண்டு, 'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.





நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து கீர்த்தி சுரேஷ்க்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். பிறகு, ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து 'கேக்' வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Popular Posts