Showing posts with label actor rajinikanth. Show all posts
Showing posts with label actor rajinikanth. Show all posts

Monday, March 9, 2020

பொதுமக்களை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திக்காததால் ரஜினி ஏமாற்றம் - தமிழருவி மணியன்

ரஜினி மக்கள் மன்றத்தினர், பொதுமக்களை சென்று சந்திக்காததே, ரஜினியை ஏமாற்றம் அடைய செய்துள்ளதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.


 விழுப்புரத்தில், “'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழருவி மணியன், கட்சிக்கும், ஆட்சிக்கும் வேறு வேறு தலைமை என ரஜினி முன்வைத்த மாற்று அரசியலை, மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை என்றார்.

 கட்சிக்கு யார் தலைமை வகித்தாலும், ஆட்சிக்கு நிச்சயம் ரஜினி தான் தலைமை வகிக்க வேண்டும் என ரஜினிக்கு தான் அறிவுறித்தியதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அனைவரும் ரஜினிகாந்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழருவி மணியன், திமுக அல்லது அதிமுக-வுடன் நிச்சயம் கூட்டணி அமைக்க மாட்டேன் என ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

Popular Posts