Tuesday, April 7, 2020

நடிகர் அஜித் ஒரு கோடி நிதியுதவி!

நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி! தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி வழங்கினார் நடிகர் அஜித்குமார்.
மேலும் பெப்ஸி தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சத்தை நடிகர் #அஜித் வழங்கினார்

Saturday, April 4, 2020

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி!

#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி; மனிதர்களுக்கு சோதனை நடத்த ஆராய்ச்சிக்குழு ஆயத்தம்

அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.  உலகளவில் பலி எண்ணிக்கை 60,112 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,089 ஆக அதிகரித்துள்ளது.


இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.அமெரிக்காவிலுள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

இதே குழுவினர் தான் கடந்த 2003 ம் ஆண்டு  சார்ஸ் நோய்க்கும், 2014ம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர். தற்போது உலகம் முழுக்க பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சார்ஸ் (sars) மற்றும் மெர்ஸ் (merz) குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே கடந்த காலத்தில் அந்த 2 வைரசுக்கும் எப்படி மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தார்களோ அதே போலவே  நிபுணர்கள் குழு கொரோனா வைரசுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

ஆம், இந்த தடுப்பு மருந்தை ஒரு எலிக்கு செலுத்தி பரிசோதனை செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அது வெற்றிகரமாக செயல்படுகிறது. அதாவது, உடலில் கொரோனா வைரஸ் தொற்று கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கின்றது. ஆகவே இந்த மருந்தை  கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.ஆனாலும் இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியதாக உள்ளது.

முதலில் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டும். ஒப்புதலை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதன் ஒப்புதல் கிடைத்த பின் மனிதர்களுக்கு உடனே சோதனை நடத்தப்படும். சோதனையில் அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். ஆனாலும் அனைத்து பணிகளுமே முடிந்து இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்றும் நிபுணர் குழுவினர் கூறினார்கள்.

Thursday, April 2, 2020

கொரோனா அச்சுறுத்தல்.. பாதுகாப்பான உறவை மேற்கொள்வது எப்படி..?

கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பது போல் காம உணர்ச்சியும் தவிர்க்க முடியாத உடல் தேவைதான்.


சமீபத்தில் வெளியான தகவலில் கூட மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்பட்டது. காரணம் கணவன் , மனைவி கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருப்பதே காரணம்.


அதேபோல் கொரோனா உடலுறவின் மூலம் பரவுமா என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம்.



 பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது எப்படி..?

முத்தம் மட்டும் போதும் அல்லது கணவன் மனைவிக்குள் மட்டும் உடலுறவு கொள்ளலாம். மற்றவர்களை நாடுவதை தவிருங்கள்.

வெளியே உடலுறவு கொள்வதை தவிருங்கள்.

உங்கள் துணைக்கு உடல்நிலை சரியில்லை எனில் உடலுறவைத் தவிர்த்திடுங்கள்.

கொரோனா வைரஸில் குணமடைந்தவர் அல்லது அறிகுறிகள் இருப்பது போல் உணர்ந்தாலும் உடலுறவைத் தவிருங்கள்.

உடலுறவு கொள்வதற்கு முன்பும் பின்பும் உடனே குளிப்பது நல்லது.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் கழுவி பாதுகாப்பது அவசியம்.

ஆணுறை போன்ற கருத்தடை விஷயங்களை மேற்கொள்வது அவசியம்.

Wednesday, April 1, 2020

எனக்கு கங்குலி போல் தோனி ஆதரவு அளிக்கவில்லை: யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டு

தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.


பிறகு மாஹி (தோனி) கேப்டன் பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி காலத்தை சுற்றியே வட்டமிடுகின்றன, காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார்.

அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை.” என்றார் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் ஜூன் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தோனியின் கீழ் 2007 டி20 உலகக்கோப்பை பிறகு 2011 ஐசிசி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்ற போது யுவராஜ் சிங் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார்.

அதனால்தான் அவர் 2011 உ.கோப்பை தொடரின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது!




லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

Popular Posts